அவர் தான் தயாரிக்கணுமா? சங்கத்துக்குள் எழுந்துள்ள எதிர்ப்பு குரல்கள்!

Bookmark and Share

அவர் தான் தயாரிக்கணுமா? சங்கத்துக்குள் எழுந்துள்ள எதிர்ப்பு குரல்கள்!

நடிகர் சங்கம் சார்பில் ஒரு படம் எடுக்கப்பட்டு அதில் வரும் லாபத்தில் கட்டடம் கட்டப்படும் என்று அறிவித்துதான் தேர்தலில் களம் இறங்கியது தற்போதைய அணி. இந்த படத்தில் சம்பளமே வாங்காமல் இளம் ஹீரோக்கள் நடிப்பார்கள் எனவும் கூறப்பட்டது.

தேர்தலில் வென்ற பின், ஸ்டார் கிரிக்கெட் நடத்திய பின்னும் கட்டடம் கட்ட போதுமான நிதி கிடைக்காததால் மீண்டும் படம் எடுக்கும் ஐடியாவை கையில் எடுத்துள்ளார்கள். படத்தை இயக்குவது டான்ஸ் மாஸ்டர் இயக்குநர்.

நடிக்கவிருப்பது சங்க செயலாளரும் பொருளாளரும். படத்தை தயாரிக்கவிருப்பது கல்வி தந்தை தயாரிப்பாளர். இதுதான் இப்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. சங்கம் சார்பிலேயே எடுக்கலாமே? அல்லது இரு நடிகர்களுமே ஃபைனான்ஸ் வாங்கி கூட எடுக்கலாம்... ஏன் அந்த கல்வி தந்தை தயாரிப்பில் படம் எடுக்க வேண்டும்? இருவருக்குமே இப்போது பெரிய மார்க்கெட் இல்லை. எனவே நஷ்டக் கணக்கு காண்பித்தால் கட்டட கனவு என்னவாவது? என்ற ரீதியில் சர்ச்சை கேள்விகளை எழுப்புகிறது எதிரணி.

இப்படியொரு முடிவு எடுத்ததற்கு சங்க பொதுக்குழுவிலோ செயற்குழுவிலோ அனுமதி பெறவில்லையாம். ஆக, திரும்பவும் வைப்ரேஷன் மோடுக்கு போயிருக்கு சங்கம்.. நடத்துங்க!


Post your comment





Related News
விவசாயிகளுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டத்துக்கு நடிகர் சங்கம் ஆதரவு
பழைய நடிகர் சங்கம் செய்த அதே தவறை இவர்களும் செய்கிறார்கள்- நில ஆக்கிரமிப்பு புகாரில் நடிகர் சங்கம்
சங்கமித்ரா படத்தில் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர்
சங்கமித்ராவுக்காக தயாராகும் ஸ்ருதிஹாசன்
எங்களை யாராலும் தடுக்க முடியாது! கார்த்தி வராதது ஏன், நடிகர் விஷால்
சிம்பு மனம் எப்படி மாறியது, வரமாட்டேன் என்று கூறி வந்தது ஏன்- ரசிகர்கள் ஆச்சரியம்
எங்களை யாராலும் தடுக்கமுடியாது: அடிக்கல் நாட்டு விழாவில் விஷால் ஆவேசம்
எல்லாரும் வாங்க! விஷால் மகிழ்ச்சியுடன் அழைப்பு
பால்யகாலம் முதல் கமல்ஹாசனுக்கு வழிகாட்டியாக இருந்தவர் சந்திரஹாசன்- நடிகர் சங்கம்
பாவனாவுக்கு நீதி கேட்டு நடிகர் சங்கம் அனுப்பிய கடிதத்திற்கு கேரள அரசு பதில்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions