சட்டமன்றத் தேர்தலில் களம் இறங்கும் நடிகர் சங்கம்

Bookmark and Share

சட்டமன்றத் தேர்தலில் களம் இறங்கும் நடிகர் சங்கம்

தேர்தல் காலங்களில் சுமார் மூன்று மாதங்களுக்கு மேல் நாடகங்கள் போடுவதற்கு உள்ளூர் நிர்வாகத்தினர் அனுமதி கொடுப்பதில்லை.

அதனால் அதையே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் நாடக நடிகர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைக் கணக்கிலெடுத்துக்கொண்டு தேர்தல்ஆணையரை நடிகர்சங்கம் சார்பில் பொன்வண்ணன் தலைமையில் இன்று சந்தித்தனர்.

அப்போது தேர்தல்ஆணையத்தின் சார்பில், நாடகம் நடத்தக்கூடாது என்று தடை எதுவும் இருக்காது அப்படி இருந்தால் உள்ளூர் நிர்வாகத்திடம் அதுபற்றிக் கேட்கிறோம் என்று சொன்னார்களாம்.

அதோடு, தேர்தல் காலத்தில் மக்களிடத்தில், தேர்தலில் மக்கள் முழுமையாகப் பங்கேற்கவேண்டும் என்பதற்காக பரப்பரையைச் செய்யவேண்டும்,

எவ்வளவுதான் நாங்கள் அதுபற்றிப் பேசினாலும் நடிகர்கள் பேசினால் அது மக்களுக்கு மிகவேகமாகப் போய்ச்சேரும் எனவே நீங்கள் எங்களுக்கு அதைச் செய்து தரவேண்டும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாம்.

அதை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டோம், நடிகர்களாக எங்களுடைய வேலையை மட்டும் செயதுகொண்டிருப்பதற்கு மத்தியில் மக்கள் பணியாற்றக் கிடைத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வோம் என்கிறார் பொன்வண்ணன்.     


Post your comment





Related News
நடிகர் திலகம் சிவாஜியை பெருமையடைய செய்த அறிவிப்பு- மகிழ்ச்சியில் திரையுலகம்
கீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்
காவிரி மேலாண்மை அமைத்தே ஆக வேண்டும் - ரஜினிகாந்த் கொந்தளிப்பு.!
நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.!
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம். திரை உலகினருக்கு அழைப்பு!
காவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் - நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
ஸ்ரீதேவி திடீர் மரணம்! தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் !!.
நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மரணம் - சோகத்தில் திரையுலகம்
கலை நிகழ்ச்சி பற்றி இவ்வளவு பேசற அஜித் காசு கொடுக்கலாமே - பிரபல நடிகர் ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions