முழு அடைப்புக்கு நடிகர் சங்கம் ஆதரவு.. திரையரங்குகள் மூடல்.. பகல் காட்சிகள், படபிடிப்பு ரத்து!

Bookmark and Share

முழு அடைப்புக்கு நடிகர் சங்கம் ஆதரவு.. திரையரங்குகள் மூடல்.. பகல் காட்சிகள், படபிடிப்பு ரத்து!

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தியேட்டர்களில் பகல் காட்சிகள் மற்றும் படப்பிடிப்பு இன்று ஒருநாள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

டெல்லியில் 41 நாட்களாக போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

இதன்காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் ஆட்டோ, லாரி உள்ளிட்ட தனியார் வாகனங்கள் ஓடவில்லை.முழு அடைப்பு போராட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்றம் சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. 

இதனால் அரசுப்பேருந்துகளும் கணிசமாகவே இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவான இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. 

முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திரைப்பட படப்பிடிப்பும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக நடிகம் சங்கம் தெரிவித்துள்ளது.


Post your comment





Related News
நாசர் தலைமையில் நடிகர் சங்க செயற்குழு கூட்டம்
நடிகர் சங்க கட்டடம் கட்ட ஏற்பட்ட பிரச்சனை
பொது சாலையை மறித்துள்ளதாக நடிகர் சங்கத்துக்கு எதிராக வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை
விவசாயிகளுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டத்துக்கு நடிகர் சங்கம் ஆதரவு
பழைய நடிகர் சங்கம் செய்த அதே தவறை இவர்களும் செய்கிறார்கள்- நில ஆக்கிரமிப்பு புகாரில் நடிகர் சங்கம்
எங்களை யாராலும் தடுக்க முடியாது! கார்த்தி வராதது ஏன், நடிகர் விஷால்
சிம்பு மனம் எப்படி மாறியது, வரமாட்டேன் என்று கூறி வந்தது ஏன்- ரசிகர்கள் ஆச்சரியம்
எங்களை யாராலும் தடுக்கமுடியாது: அடிக்கல் நாட்டு விழாவில் விஷால் ஆவேசம்
எல்லாரும் வாங்க! விஷால் மகிழ்ச்சியுடன் அழைப்பு
பால்யகாலம் முதல் கமல்ஹாசனுக்கு வழிகாட்டியாக இருந்தவர் சந்திரஹாசன்- நடிகர் சங்கம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions