பொது சாலையை மறித்துள்ளதாக நடிகர் சங்கத்துக்கு எதிராக வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை

Bookmark and Share

பொது சாலையை மறித்துள்ளதாக நடிகர் சங்கத்துக்கு எதிராக வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை

சென்னை ஐகோர்ட்டில், தியாகராய நகர், வித்யோதயா காலனியை சேர்ந்த ஸ்ரீரங்கன் உள்ளிட்ட பலர் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளனர். அந்த வழக்கில் அவர்கள், “சென்னை தியாகராய நகர், அபிபுல்லா சாலையில் இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக, அபிபுல்லா சாலையையும், பிரகாசம் சாலையையும் இணைக்கும் 33 அடி அகலம் கொண்ட பொது சாலையை நடிகர் சங்கத்தினர் மறித்துள்ளனர். 

இதனால், பொதுமக்கள் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் குடியிருப்பவர்கள், பிரகாசம் சாலைக்கு வருவதற்கு வேறு பாதைகளை பயன்படுத்தி சுற்றி வரவேண்டியதுள்ளது. விதிமுறைகளை மீறி, சாலைகளை மறித்து கட்டிடம் கட்டப்படுவதால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்று கூறி உள்ளனர்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர், ‘இந்த வழக்கு தொடர்பாக நடிகர் சங்கம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்த நிலையில் வழக்கு, இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 


Post your comment





Related News
ஓவியாவை பார்த்தீங்களா? எது மேல சவாரி செய்யறாங்க பாருங்க – வைரலாகும் பகீர் புகைப்படம்.!
விஜய்க்கு ஜோடியாகும் ஜிமிக்கி கம்மல் ஷெர்லி.!
2.0 பட டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்!
சிம்புவோட சிலம்பாட்டம் பட இயக்குனர் இப்போ என்ன செய்றார் தெரியுமா?
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்
மெர்சல் பர்ஸ்ட் லுக்கை பார்த்த விவேகம் டீம் இதை தான் சொன்னார்களாம் - சூப்பர் தகவல்.!
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
பிரபாஸோட அடுத்த படத்துக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
எனக்கு செட் ஆகாத ஹீரோயின்! விஜய் சொன்னது







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions