குருதட்சணை திட்டத்தை நிறைவு செய்யும் நடிகர் சங்கம்

Bookmark and Share

குருதட்சணை திட்டத்தை நிறைவு செய்யும் நடிகர் சங்கம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக முறைப்படுத்தாமல் இருந்த உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து அதன் மூலம் அவர்களின் தேவைகளை கண்டறிந்து உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்டது தான் “குரு தட்சணைத்” திட்டம்.

கடந்த மாதம் முதல் கட்டமாக சென்னையில் நடிகர் சிவக்குமார், நடிகை சச்சு,மேனகா ஆகியோரால் துவங்கி வைக்கப்பட்டது. சென்னையில் உள்ள 1000 உறுப்பினர்களின் முழு விபரங்களுடன் இணைய தளத்தில் பதிவிடுவதற்கு அவர்களின் புகைப்படம் வீடியோ அனைத்தும் சேகரிக்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக, செயற்குழு உறுப்பினர்களில் நடிகர்களாக உள்ள பூச்சி முருகன், ‘கோவை’ சரளா, பசுபதி, மனோபாலா, ஸ்ரீமன், ‘பருத்திவீரன் ‘சரவணன், உதயா, நந்தா, ரமணா, பிரேம்குமார், விக்னேஷ், லலிதா குமாரி, சங்கீதா, ராதா, ஹேமசந்திரன் அயூப்கான், ஆகியோர் பல குழுக்களாக பிரிந்து சென்று, தமிழகமெங்கும் உள்ள நாடக நடிகர்கள் 1000 பேரின் முழுமையான விபரங்கைளை சேகரித்து வந்திருக்கின்றனர்!

இதனது இறுதிகட்டமாக விடுபட்ட உறுப்பினர்களின் தகவல் சேகரிக்க வருகிற 6,7,8 தேதிகளில் சென்னை நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது. அதனது நிறைவு நாளை நடிகர் பிரபு, நடிகர் சத்யராஜ், நடிகர் நிழல்கள் ரவி, நடிகை சுகன்யா ஆகியோர் கலந்து கொண்டு நடத்தி வைக்கிறார்கள்.

 


Post your comment





Related News
காவிரி மேலாண்மை அமைத்தே ஆக வேண்டும் - ரஜினிகாந்த் கொந்தளிப்பு.!
நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.!
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம். திரை உலகினருக்கு அழைப்பு!
காவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் - நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
ஸ்ரீதேவி திடீர் மரணம்! தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் !!.
நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மரணம் - சோகத்தில் திரையுலகம்
கலை நிகழ்ச்சி பற்றி இவ்வளவு பேசற அஜித் காசு கொடுக்கலாமே - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
நடிகையை தொடர்ந்து பிரபல நடிகரையும் அசிங்கப்படுத்திய நடிகர் சங்கம்
மலேசியாவில் நடக்கவுள்ள நடிகர் சங்க நட்சத்திர கலை விழாவிற்கு தல அஜித் வருகிறாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions