ஜெயலலிதாவுக்கு தமிழ் திரையுலகம் வாழ்த்து!

Bookmark and Share

ஜெயலலிதாவுக்கு தமிழ் திரையுலகம் வாழ்த்து!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சராக பதவி ஏற்கிறார். தேர்தலில் வென்ற ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன. தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு சங்கத்தினர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘எங்கள் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய தமிழ்நாடு முதல்-அமைச்சர் அம்மா அவர்களுக்கு வணக்கம்.

தமிழக சட்டசபைக்கான தேர்தலில் 6-வது முறையாக தாங்கள் தமிழ் நாட்டின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.’’ என்று குறிப்பிட்டு உள்ளனர்.

தேர்தலில் வெற்றி பெற்ற நடிகர் சங்க உறுப்பினர் கருணாசுக்கு நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு, செயலாளர்கள் டி.சிவா, ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர்கள் கதிரேசன், பி.எல்.தேனப்பன், பொருளாளர் டி.ஜி.தியாகராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

‘‘நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்களால் நான், மக்களுக்காக நான் என்று சூளுரைத்து தமிழகம் முழுவதும் தன்னிகரில்லா அறுதி பெரும்பான்மை வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்-அமைச்சராக அரியணை ஏறும் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.’’

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கேயார் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘தமிழக அரசியல் வரலாற்றில் 32 வருடங்களுக்கு பிறகு மிகப்பெரிய புரட்சி செய்திருக்கிறார், புரட்சி தலைவி. இது கலைத்துறைக்கும், நாட்டு மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சி. வாழ்த்துகள்’’ என்று கூறியிருக்கிறார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் அதன் தலைவர் ஜி.சிவா, பொதுச்செயலாளர் கே.ஆர்.செல்வராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.சந்திரன் ஆகியோர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் அம்மாவின் மாபெரும் வெற்றியை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் தொழிலாளர்களாகிய நாங்கள் மனதார கொண்டாடுகிறோம்.

இதை அம்மாவை சந்தித்து வெளிப்படுத்தியபோது மகிழ்ச்சி அடைந்தார்கள். பெப்சி தொழிலாளர்கள் சார்பாக அம்மாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன் இந்த வரலாற்று சாதனை படைத்த அம்மாவுக்கு மனதார வாழ்த்துகளை தெரிவிப்பதாக செயற்குழுவில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.’’

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் ஜெயலலிதாவுக்கு பூச்செண்டு அனுப்பினார்கள்.


Post your comment





Related News
காவிரி மேலாண்மை அமைத்தே ஆக வேண்டும் - ரஜினிகாந்த் கொந்தளிப்பு.!
நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.!
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம். திரை உலகினருக்கு அழைப்பு!
காவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் - நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
ஸ்ரீதேவி திடீர் மரணம்! தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் !!.
நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மரணம் - சோகத்தில் திரையுலகம்
கலை நிகழ்ச்சி பற்றி இவ்வளவு பேசற அஜித் காசு கொடுக்கலாமே - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
நடிகையை தொடர்ந்து பிரபல நடிகரையும் அசிங்கப்படுத்திய நடிகர் சங்கம்
மலேசியாவில் நடக்கவுள்ள நடிகர் சங்க நட்சத்திர கலை விழாவிற்கு தல அஜித் வருகிறாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions