தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நாக சைதன்யா படம்!

Bookmark and Share

தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நாக சைதன்யா படம்!

தெலுங்கில் நாக சைதன்யா நடிப்பில் வெளிவந்த ‘ஒக்க லைலா கோசம்’ தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது தெலுங்கில் வெற்றிபெற்ற படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்துகொண்டிருப்பதால் இந்த படத்தை மொழிமாற்றம் செய்து வெளியிடவுள்ளனர்.

அதன்படி தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவரவிருக்கும் இப்படத்திற்கு ‘லைலா ஓ லைலா’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பிரபு, சுமன், ஷியாஜி ஷிண்டே, நாசர், பிரம்மானந்தம், ஆலி, ஆசிஷ் வித்யார்த்தி, சுப்ரீத் ஆகியோர் நடித்துள்ளனர்.

கே.விஜயகுமார் இயக்கியுள்ள இப்படத்தை தமிழில் ஸ்ரீலட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.என்.பாலாஜி தயாரிக்கிறார். பணக்கார வாலிபனான நாகசைதன்யா ஒரு பெண்ணை காதலிக்கிறார். காதலை ஏற்காத அந்த பெண் விலகி நிற்கிறாள். இதற்கிடையே அந்த பெண்ணிற்கும், நாகசைதையாவிற்கும் திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது. 

ஆனால் நாகசைதன்யா அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி விடுகிறார். விருப்பப்பட்ட பெண்ணே கிடைக்கும்போது நாகசைதன்யா மறுக்க என்ன காரணம்? என்பதுதான் இந்த படத்தின் சுவாரஸ்யம். இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. 


Post your comment





Related News
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ
ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா?
விலைக்கு வாங்கப்பட்ட ஆர்.கே.நகர், மக்களும் உடந்தை - கொந்தளிக்கும் கமல்ஹாசன்.!
கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!
எந்த வேட்பாளரையும் நான் ஆதரிக்கவில்லை: விஷால்
அடுத்தகட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன்: விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions