மீண்டும் நாக சைதன்யா - கௌதம் மேனன் கூட்டணி?

Bookmark and Share

மீண்டும் நாக சைதன்யா - கௌதம் மேனன் கூட்டணி?

பிரபல நடிகரான அக்கினேனி நாக சைதன்யாவும் பிரபல இயக்குனரான கௌதம் வாசுதேவ மேனனும் மீண்டும் இணைகிறார்கள். நாக சைதன்யாவின் படங்களில் தனி முத்திரை பதித்த படம் ஏம் மாய  சேசாவே என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.  

அந்த மாபெரும் வெற்றி படத்தை இயக்கியது கௌதம் வாசுதேவ மேனன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்நிலையில் இந்த புது படத்தை பற்றி நாக சைதன்யா கூறியதாவது: நானும், கௌதம் சாரும் மீண்டும் ஒரு புதுப்படத்திற்காக இணைவோம். எனது வாழ்நாளின்   முக்கிய படங்களுள் ஒன்றாக ஏம் மாய  சேசாவே அமைந்தது. அதன் பிறகு மீண்டும் இருவரும் இணைய வேண்டும் என்று நான் பலமுறை நினைத்ததுண்டு.

சமீபத்தில் இருவரும் இது பற்றி பேசினோம். விரைவில் அது நடக்க வேண்டும். நிச்சியமாக அது நடக்கும். அவர் தற்போது தமிழ் படங்களில் பிசியாக இருக்கிறார். இதற்கு நடுவே நாங்கள் கண்டிப்பாக இணைவோம். இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் தற்போது பிரபல இயக்குனர் சந்து மொண்டேடி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த புது படத்தில் நாக சைதன்யாவுக்கு பிரபல நடிகையான தமன்னா ஜோடியாக நடிக்கிறார்.


Post your comment





Related News
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions