இது வழக்கமான தெலுங்கு படம் அல்ல...!

Bookmark and Share

இது வழக்கமான தெலுங்கு படம் அல்ல...!

பிரபல ஹீரோ நாக சைதன்யா நடித்து நாளை (ஏப்ரல் 24ம் தேதி)  வெளிவர இருக்கும் புதிய படமான தோசெய் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்த படத்தில் ஹீரோவின் லுக், கதைகளம்,  மற்றும் தொழில் நுட்பங்களில் புதுமை என பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றது.

இந்த படத்தில் நாக சைத்தன்யாவுக்கு பிரபல நடிகை கிரித்தி சனோன் ஜோடியாகும். பிரபல இயக்குனரான சுதீர் வர்மா இயக்கும் இந்த படமானது தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு புது அனுபவத்தை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இது குறித்து ஹீரோ நாக சைத்தன்யா கூறும்போது,

பிரபல இயக்குனர் சுதீர் வர்மா இயக்கத்தில் நடிப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியாகும். இந்த படம் மிகவும் வித்தியாசமான வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான தெலுங்கு படமே அல்ல. ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தை கொடுக்கும்.

இந்த படத்தின் கதைகளம், கதை சொல்லப்பட்ட விதம் மற்றும் ஸ்டைல் எல்லாமே வித்தியாசமாகும். குறிப்பாக இளம் ரசிகர்களை மனதில் வைத்தே இந்த படத்தின் கதையை இயக்குனர் கையாண்டு இருக்கிறார்.

நான் இதை போன்ற ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்த போது, பிரபல இயக்குனரான சுதீர் வர்மா என்னிடம் இந்த படத்தின் கதையை சொன்னார். நான் உடனே ஓகே சொல்லி விட்டேன்.

எனக்கு இந்த படம் ஸ்பெஷல் தான், என்றார்.  இந்த பட இயக்குனரின் முந்தைய படமான சுவாமி ரா ரா மிகப்பெரிய வெற்றி அடைந்தது நினைவிருக்கலாம். அதனால் தோசெய் படமும் மெகா ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ
ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா?
விலைக்கு வாங்கப்பட்ட ஆர்.கே.நகர், மக்களும் உடந்தை - கொந்தளிக்கும் கமல்ஹாசன்.!
கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!
எந்த வேட்பாளரையும் நான் ஆதரிக்கவில்லை: விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions