நாகர்ஜுனாவுடன் மூன்றாவது முறையாக இணைவாரா லாரன்ஸ்?

Bookmark and Share

நாகர்ஜுனாவுடன் மூன்றாவது முறையாக இணைவாரா லாரன்ஸ்?

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா தற்போது நடிகர் கார்த்தியுடன் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தில் நடித்து வருகின்றார். மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரபல நடிகர் மற்றும் இயக்குநர் ராகவா லாரான்ஸ் நாகர்ஜுனா நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. காஞ்சனா 2 படத்தின் அபார வெற்றியைத் தொடர்ந்து லாரன்ஸ் பட்டாஸ் எனும் தெலுங்கு படத்தை தமிழில் இயக்கி நடிப்பதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது லாரன்ஸ் நாகர்ஜுனாவிற்கு என கதையை தயார் செய்து லாரான்ஸ் அவரிடம் கூறி அப்படத்தில் நடிப்பதற்கு சம்மதம் பெற்றிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அப்படத்தின் திரைக்கதையை முழுவதும் எழுதி முடித்த பின்னர் லாரன்ஸ் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என தெரிகிறது.

டோலிவுட்டில் மாஸ், டான் போன்ற நாகர்ஜூனாவின் வெற்றி படங்களை இயக்கிய லாரன்ஸ் மூன்றாவது முறை அவருடன் இணையவிருப்பதாக கூறப்படும் தகவல் டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions