நாகார்ஜுனாவுக்கு கைகொடுத்த 'பிரம்மன்' நாயகி...!

Bookmark and Share

நாகார்ஜுனாவுக்கு கைகொடுத்த 'பிரம்மன்' நாயகி...!

தெலுங்கில் நீண்ட நாட்கள் கழித்து நாகார்ஜூனா இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் தான் 'சொக்கடே சின்னி நாயனா'.இந்தப்படத்தில் தாத்தா, பேரன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார் நாகார்ஜுனா.

இதில் தாத்தா கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடிக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.. 21 வருடங்களுக்கு முன் இதே நாகார்ஜுனா இரட்டை வேடங்களில் வாலிப மிடுக்குடன் நடித்த ;ஹலோ பிரதர்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் ரம்யா கிருஷ்ணன்.. என்ன செய்வது காலம் இப்போது அவரை தாத்தாவுக்கேற்ற பாட்டியாக நடிக்க அழைத்திருக்கிறது.  

இதில் பேரனுக்கு ஜோடியாக நடிக்கும்படி சுப்ரமணியபுரம்' ஸ்வாதியை கூப்பிட அவரோ 'நோ' சொல்லிவிட்டாராம்.. காரணம் அவர்கள் கேட்ட தேதிகளை தமிழிலும் மலையாளத்திலும் நடிக்க ஏற்கனவே ஒதுக்கி கொடுத்து விட்டாராம்.

இப்போது நாகார்ஜுனாவுக்கு கைகொடுத்திருக்கிறார் நடிகை லாவண்யா திரிபாதி.. பிரம்மன் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தாரே அவரே தான். ஏற்கனவே இவர் நாகார்ஜுனா நடித்த சூப்பர்ஹிட் படமான 'மனம்' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து அவரது மனதை கவர்ந்திருந்ததால் இந்த வாய்ப்பு எளிதாக கைகூடியுள்ளது.  


Post your comment





Related News
நாகார்ஜுனா ஸ்டுடியோவில் தீ விபத்து
மங்காத்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்
என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா
மகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு
அடப்பாவமே, இந்த காரணத்தால் தான் திருமணம் நின்றது என்றாரா சமந்தா மாமனார்?
தங்கள் காதலை ஒருவரிடம் மட்டும் மறைத்த சமந்தா, நாக சைத்தன்யா
நாகார்ஜுனாவின் 2 மகன்களின் திருமண ஏற்பாடுகள் தீவிரம்
20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் ரட்சகன்!
மகனின் வெற்றியை விட தந்தைக்கு வேறு என்ன மகிழ்ச்சி – நாகார்ஜூனா!
மகிழ்ச்சியின் உச்சத்தில் சமந்தா – காரணம் இதுதான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions