டி.வி.சேனல் துவங்க நாகார்ஜூனா திட்டம்

Bookmark and Share

டி.வி.சேனல் துவங்க நாகார்ஜூனா திட்டம்

தெலுங்கு திரையில் முன்னணி நடிகராக விளங்கும் நாகார்ஜுனா, தமிழில் இதயத்தை திருடாதே, ரட்சகன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் கார்த்தி நடிக்கும் படத்தில் நாகார்ஜுனா இணைந்து நடித்து வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தில் நடிகை தமன்னா நாயகியாக நடித்து வருகின்றார். இப்பட வேலைகளில் மும்முரமாக இருந்தாலும், நடிகர் நாகார்ஜுனா டி.வி.சேனல் துவங்க தீவீரமாக திட்டம் தீட்டி வருகிறாராம்.

இந்த சேனலுக்கு மனம் என்று பெயர் வைத்துள்ளனர். பொட்டிலுரி வரப்பிரசாத்துடன் இணைந்து நடிகர் நாகார்ஜூனா இந்த டி.வி.சேனல் நிறுவவுள்ளார். ஏப்ரல் 24 ம் தேதி இந்த சேனலுக்காக அறிமுக விழா ஐதராபாத்தில் நடைபெறுகின்றது. நடிகர் நாகார்ஜூனா ஏற்கனவே மா டி.வியில் ஒரு நிறுவனராக பொறுப்பு வகித்தார்.

ஆனால் ஸ்டார் குழுமம் அந்நிறுவனத்தின் பெரும் பங்குகளை வாங்கி விட்டதால் நாகார்ஜூனா, இந்த புதிய சேனலை ஆரம்பிப்பதாக டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.


Post your comment





Related News
நாகார்ஜுனா ஸ்டுடியோவில் தீ விபத்து
மங்காத்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்
என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா
மகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு
அடப்பாவமே, இந்த காரணத்தால் தான் திருமணம் நின்றது என்றாரா சமந்தா மாமனார்?
தங்கள் காதலை ஒருவரிடம் மட்டும் மறைத்த சமந்தா, நாக சைத்தன்யா
நாகார்ஜுனாவின் 2 மகன்களின் திருமண ஏற்பாடுகள் தீவிரம்
20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் ரட்சகன்!
மகனின் வெற்றியை விட தந்தைக்கு வேறு என்ன மகிழ்ச்சி – நாகார்ஜூனா!
மகிழ்ச்சியின் உச்சத்தில் சமந்தா – காரணம் இதுதான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions