ரசிகர்களுக்கு நாகார்ஜுனா தரும் பிறந்தநாள் பரிசு

Bookmark and Share

ரசிகர்களுக்கு நாகார்ஜுனா தரும் பிறந்தநாள் பரிசு

டோலிவுட்டின் முன்னணி நடிகரான அக்கினேனி நாகார்ஜுனா அவரது மகன்கள் நாக சைதன்யா மற்றும் அகில் நாயகனாக நடிக்க வந்த பின்னரும் இளமை ததும்பும் துள்ளலுடன் திரைப்படங்களில் நாயகனாக நடிக்கின்றார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்து வரும் நாகார்ஜுனா மேலும் சில தெலுங்கு படங்களை தயாரிக்கின்றார். நாகார்ஜுனா வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி அவரது பிறந்த நாளைக் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளார்.

நாகார்ஜுனா  மற்றும் நடிகை அமலாவின் மகன் அகில் நாயகனாக அறிமுகமாகும் தெலுங்கு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை நாகார்ஜுனாவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அக்கினேனி குடும்ப ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அகில் படத்தின் டீசர் நாகார்ஜுனா பிறந்த நாளான்று திரைக்கு வரும் என்ற தகவல் மேலும் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் விவி விநாயக் இயக்கும் இப்படத்தில் அகிலுக்கு ஜோடியாக நடிகை சேஷா சைகல் நடித்து வருகின்றார். நிதின் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும்  இப்படத்தை அக்டோபர் 22 ஆம் தேதி விஜயதசமி அன்று திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.  


Post your comment





Related News
நாகார்ஜுனா ஸ்டுடியோவில் தீ விபத்து
மங்காத்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்
என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா
மகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு
அடப்பாவமே, இந்த காரணத்தால் தான் திருமணம் நின்றது என்றாரா சமந்தா மாமனார்?
தங்கள் காதலை ஒருவரிடம் மட்டும் மறைத்த சமந்தா, நாக சைத்தன்யா
நாகார்ஜுனாவின் 2 மகன்களின் திருமண ஏற்பாடுகள் தீவிரம்
20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் ரட்சகன்!
மகனின் வெற்றியை விட தந்தைக்கு வேறு என்ன மகிழ்ச்சி – நாகார்ஜூனா!
மகிழ்ச்சியின் உச்சத்தில் சமந்தா – காரணம் இதுதான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions