62 கோடி ரூபாய் கடனை திருப்பி தராததால்; வீதிக்கு வந்த வங்கி பிரச்சனை

Bookmark and Share

62 கோடி ரூபாய் கடனை திருப்பி தராததால்; வீதிக்கு வந்த வங்கி பிரச்சனை

பிரச்சனை இல்லாத இடம் இல்லை, ஏழையின் பிரச்சனை அக்கம் பக்கம் தெரியும். பணக்காரன் பிரச்சனை உலகம் முழுவதும் தெரியும் அந்த மாதிரி தான் ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளார் நடிகர் நாகார்ஜுனா.

ஆந்திரா வங்கி மற்றும் இந்தியன் வங்கியிடம் வாங்கிய கடனை திருப்பி கட்டாததால் நேற்று நாளிதழில் நாகார்ஜுனாவின் இடமான அன்னபூர்ணா ஸ்டுடியோவிலிருந்து 7.25 ஏக்கரை பிரித்து கொள்வதாக விளம்பரம் அளித்திருந்தார்கள், இந்த விளம்பரம் ஆந்திரா முழுவதும் நேற்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட உடனே என்ன நடந்தது என்பதை விசாரித்தோம்.

நாகார்ஜுனா அவரின் தேவைக்காக இந்த இரண்டு வங்கியிலிருந்து லோன் வாங்கியிருக்கிறார், ஆனால் லோன் வாங்கிக் கொண்டு சென்றவர் மீண்டும் வங்கி பக்கம் எட்டிப்பார்க்காததால் பல நோட்டீஸ்களை நாகார்ஜுனாவுக்கு அனுப்பி பார்த்திருக்கிறது, எந்த நோட்டீஸ்க்கும் பதில் சொல்லாத நாகார்ஜுனாவை ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்து அவரின் டாக்குமெண்டுகளை எடுத்து பாத்தபோது அன்னபூர்ணா ஸ்டுடியோவின் டாக்குமெண்டுகள் இருப்பதை தெரியவர உடனே அந்த இடத்திலிருந்து 7.25 ஏக்கரை பிரித்துவிடலாமென இந்த விளம்பரத்தை கொடுத்திருக்கிறது வங்கிகள்.

நாகார்ஜுனா மொத்தம் கட்ட வேண்டிய தொகை 62 கோடியாம். இந்த பிரச்சனை ஒருபுறமிருக்க N கன்வென்ஷன்ஸ் சென்டர் என்ற பெயரில் கட்டிவரும் கட்டிடத்தின் வேலைகளும் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, அரசுக்கு சொந்தமான இடத்தில் இந்த கட்டிடம் கட்டி வருவதாக இன்னொரு பிரச்சனையிலும் நாகார்ஜுனா சிக்கியுள்ளார்.


Post your comment





Related News
நாகார்ஜுனா ஸ்டுடியோவில் தீ விபத்து
மங்காத்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்
என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா
மகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு
அடப்பாவமே, இந்த காரணத்தால் தான் திருமணம் நின்றது என்றாரா சமந்தா மாமனார்?
தங்கள் காதலை ஒருவரிடம் மட்டும் மறைத்த சமந்தா, நாக சைத்தன்யா
நாகார்ஜுனாவின் 2 மகன்களின் திருமண ஏற்பாடுகள் தீவிரம்
20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் ரட்சகன்!
மகனின் வெற்றியை விட தந்தைக்கு வேறு என்ன மகிழ்ச்சி – நாகார்ஜூனா!
மகிழ்ச்சியின் உச்சத்தில் சமந்தா – காரணம் இதுதான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions