நாகார்ஜுனா, கார்த்தி படம் நாளை ஆரம்பம்...

Bookmark and Share

நாகார்ஜுனா, கார்த்தி படம் நாளை ஆரம்பம்...

தெலுங்குத் திரையுலகின் எவர் கிரீன் இளமையான ஹீரோ நாகார்ஜுனா, கார்த்தி இருவரும் முதல் முறையாக இணைந்து நடிக்க வம்சி படப்பள்ளி தமிழ், தெலுங்கில் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் சென்னையில் ஆரம்பமாகிறது.

பிரெஞ்சில் வெளியான 'தி இன்டச்சபிள்ஸ்' என்ற படத்தைத் தழுவி எடுக்கப்பட உள்ள படம் இது. பக்க வாத நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கும், அவரைப் பார்த்துக் கொள்ளும் மற்றொருவருக்கும் இடையே ஏற்படும் சம்பவங்கள்தான் படத்தின் கதை.

ஸ்ருதிஹாசன் படத்தின் நாயகியாக நடிக்கிறார். 70களில் முன்னணி நாயகியான ஜெயசுதா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நாகார்ஜுனா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்கும் படம் இது. பிரவீண் காந்தி இயக்கத்தில்  1997ம் ஆண்டு வெளிவந்த 'ரட்சகன்' படத்திற்குப் பிறகு தற்போதுதான் தமிழில் நடிக்க வருகிறார்.

அதற்கு முன் 1989ம் ஆண்டு நாகார்ஜுனா நடித்து தெலுங்கிலிருந்து டப்பிங் ஆகி வெளிவந்த “இதயத்தை திருடாதே, கீதாஞ்சலி” ஆகிய படங்கள் இங்கு மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தது  குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக தெலுங்கின் முன்னணி ஹீரோக்கள் தமிழிலும் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்களின் ஆசையை நிறைவேற்ற சீனியர் ஹீரோவான நாகார்ஜுனா தமிழ்ப் படங்களில் நடிப்பதை முதலில் ஆரம்பித்து வைத்துள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions