தமிழுக்கு வரும் நாகார்ஜுனா மகன்

Bookmark and Share

தமிழுக்கு வரும் நாகார்ஜுனா மகன்

கோலிவுட் நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி, ஆர்யா, ஷாம் போன்றவர்கள் தெலுங்கிலும் கவனம் செலுத்துகின்றனர். தமிழில் வெளிவரும் இவர்களது படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது.

கார்த்தி நேரடி தெலுங்கு படமொன்றில் நடித்தும் வருகிறார். இதேபோல் டோலிவுட் நடிகர்கள் ராம் சரண் உள்ளிட்ட சில ஹீரோக்களுக்கு தமிழ் படங்களில் நடிக்கும் ஆசை உள்ளது. தமிழில் ரட்சகன் படத்தில் நடித்திருக்கிறார் நாகார்ஜுனா.

தற்போது அவரது மகன் நாக சைதன்யா தமிழுக்கு வருகிறார். இவர், 100 பர்சன்ட் லவ், மனம், ஆட்டோ நகர் சூர்யா, ஒக லைலா கோசம் போன்ற தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் அவரை சந்தித்த இயக்குனர் சந்து மன்டெட்டி, தந்தை மகன் இடையேயான உறவு பற்றி கதையை சொன்னார். தமிழ், தெலுங்கில் இதை உருவாக்கலாம் என்றார்.

கான்செப்ட் பிடித்துவிடவே, ' தமிழில் அறிமுகமாவதற்கு பொருத்தமான படமாக இருக்கும் முழுஸ்கிரிப்ட்டும் தயார் செய்யுங்கள்‘ என சந்துவிடம் சொன்னாராம் நாக சைதன்யா.

இதையடுத்து தமிழுக்கு ஏற்ப ஸ்கிரிப்ட் தயாராகிறது. ‘நாக சைதன்யா சென்னையில்தான் வளர்ந்தார். தமிழ் நன்கு பேச வரும். பொருத்தமான கதையாக இருந்ததால் தமிழில் நடிக்க முடிவு செய்துள்ளார்'  என அவரது தரப்பினர் கூறினர்.


Post your comment





Related News
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ
ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா?
கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!
சமந்தா - நாகசைதன்யா வரவேற்பு நிகழ்ச்சி: நேரில் வாழ்த்திய சினிமா பிரபலங்கள்
சமந்தா நாக சைதன்யாவும் இப்போது அங்கு தான் ஹனிமூன் கொண்டாடுகிறார்களா? கசிந்த தகவல்
கணவருக்காக திடீரென தனது முடிவை மாற்றி கொண்ட சமந்தா.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions