மகனின் வெற்றியை விட தந்தைக்கு வேறு என்ன மகிழ்ச்சி – நாகார்ஜூனா!

Bookmark and Share

மகனின் வெற்றியை விட தந்தைக்கு வேறு என்ன மகிழ்ச்சி – நாகார்ஜூனா!

தெலுங்கில் ரீமேக் ஆகி வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கும் பிரேமம் ரூ 21 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.. இவ்வெற்றியை நேற்று மாலை படக்குழுவினர் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

அவ்விழாவில் கலந்து கொண்ட நாகசைதன்யாவின் தந்தை நாகார்ஜூனா பேசும்போது;-

“பிரேமம் படத்தை பார்த்தவுடனே தெரிந்துவிட்டது இப்படம் தெலுங்கிலும் நிச்சய வெற்றி பெறும் என்று, இதனால் அப்போதே இயக்குனரை அழைத்து பாராட்டி விட்டேன். இப்படத்தின் இறுதிகாட்சிகள் எனது கண்ணில் கண்ணீரை வர செய்தன. இயக்குனர் சண்டூ டோலிவுட் ரசிகர்களின் ரசனைக்கேற்ப இப்படத்தை உருவாக்கியுள்ளார். எனது கீதாஞ்சலி படத்தின் வெற்றியைப் போல் நாகசைதன்யாவின் பிரேமம் படத்தின் வெற்றியைப் பார்க்கின்றேன்.

நாகசைதன்யா இப்படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மகனின் வெற்றியை விட தந்தைக்கு வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும் எனும் பிரேமம் பட வசனமே இத்தருணத்திற்கு பொருத்தமானது”என கூறினார்.

மேலும் அதை தொடர்ந்து பேசிய நாகசைதன்யா;- இயக்குனர் சண்டூ தனக்கு மிக பெரும் வெற்றி படத்தைக் கொடுத்துள்ளார். இதற்காக அவருக்கு முதலில் நன்றி கூற விரும்புவதாக தெரிவித்தார். தொடர்ந்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த நாகசைதன்யா, தங்களின் குறிக்கோளுக்கு ஏற்ப மலையாள பிரேமம் படத்தின் தரத்தை குறைத்து விடாமல், தெலுங்கில் அப்படத்தைக் கொடுத்துள்ளதாக விமர்சனங்கள் கிடைத்துள்ளதே இப்படத்தின் பெரிய வெற்றி என்று கூறினார்.


Post your comment





Related News
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ
ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா?
கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!
சமந்தா - நாகசைதன்யா வரவேற்பு நிகழ்ச்சி: நேரில் வாழ்த்திய சினிமா பிரபலங்கள்
சமந்தா நாக சைதன்யாவும் இப்போது அங்கு தான் ஹனிமூன் கொண்டாடுகிறார்களா? கசிந்த தகவல்
கணவருக்காக திடீரென தனது முடிவை மாற்றி கொண்ட சமந்தா.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions