இயக்குனருடன் சென்று போஸ்டர் ஒட்டிய கதாநாயகன் பாலாஜி

Bookmark and Share

இயக்குனருடன் சென்று போஸ்டர் ஒட்டிய கதாநாயகன் பாலாஜி

காதல் சொல்ல வந்தேன் படம் மூலம் நடிகரான பாலாஜி, தற்போது நகர்வலம் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக தீக்‌ஷிதா நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் பாலா, யோகிபாபு, நமோ நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சென்னை நகரில் குடிநீர் வினியோகம் செய்யும் மெட்ரோ குடிநீர் லாரி டிரைவர், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு பெண்ணை காதலிக்கிறார். இதனால் ஏற்படும் பிரச்சினைகளை சென்னை சூழ்நிலையில் சொல்லும் கதையாக நகர்வலத்தை உருவாக்கி வருகிறார்கள்.

சென்னை நகர மக்களின் வாழ்க்கைச் சம்பவங்களை சுவாரஸ்யமாக சொல்லும் நகர்வலத்தை இயக்கியுள்ள மாரிமுத்து இந்த படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை படத்தின் நாயகன் பாலாஜியும், இயக்குனர் மாரிமுத்துவும் தெருத்தெருவாக சென்று ஒட்டியுள்ளனர். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions