ஒரேநேரத்தில் நாகர்ஜுனா வீட்டில் இரண்டு திருமணம்?

Bookmark and Share

ஒரேநேரத்தில் நாகர்ஜுனா வீட்டில் இரண்டு திருமணம்?

தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தமிழில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். இவர் ஒரு தெலுங்கு நடிகரை காதலித்து வருவதாக பகிரங்கமாக அறிவித்தார். அந்த காதலர் வேறு யாருமில்லை, நாக சைதன்யாதான் என மீடியாக்களில் பேசப்படுகிறது.

இதுவரை இந்த காதலுக்கு எதிராக இருந்த நாகர்ஜுனா, தற்போது இவர்கள் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டதாவும் இதைத்தொடர்ந்து இவர்கள் நிச்சயதார்த்தம் விரைவில் நடைபெறும் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் நாக சைதன்யாவின் தம்பி அகிலும் தற்போது காதல் வயப்பட்டுள்ளாராம்.

கர்நாடகாவை சேர்ந்த பிரபல பேஷன் டிசைனர் ஷாலினி பூபால்தான் இவரது காதலியாம். இவர்களுக்கும் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறும் என கூறப்படுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions