கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே! காமெடியன் கொட்டாச்சி புலம்பல்

Bookmark and Share

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே! காமெடியன் கொட்டாச்சி புலம்பல்

பல படங்களில் காமெடியனாக நடித்திருப்பவர் கொட்டாச்சி. இவரை கவர்ந்த நடிகர் நாகேஷாம். அதனால் நாகேஷ் நடித்த படங்களை தவறாமல் பார்த்து ரசித்து வந்த அவர், அவரைப்போன்று ஒரு நடிகராக இந்த சினிமாவில் வர வேண்டும் என்றுதான் வந்தாராம்.

சில படங்களில் அவரை பின்பற்றி நடித்து வந்தவருக்கு, வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த் - ப்ருத்விராஜ் நடித்த காவியத்தலைவன் படத்தில் அப்படியொரு வாய்ப்பு கிடைத்ததாம்.

அதாவது, நாடக கலைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவான அந்த படத்தில் நாகேஷ் போன்ற ஒரு காமெடியனாகத்தான் கொட்டாச்சியை நடிக்க வைத்திருந்தாராம் வசந்தபாலன்.

படத்தில் நடக்கும் நாடகங்கள் மட்டுமின்றி, சித்தார்த், ப்ருத்விராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் இவர் காமெடி செய்யும் காட்சிகள் நிறைய இடம்பெற்றிருந்ததாம். ஆனால், கடைசி நேரத்தில் படத்தின் நீளம் அளவுக்கதிகமாக இருந்ததால், மொத்த காமெடி சீன்களையும் கத்தரித்து விட்டாராம் இயக்குனர்.

அதில் கொட்டாச்சி நடித்த பெருவாரியான காமெடி காட்சிகள் நீக்கப்பட்டு விட்டதாம். அதனால், தனக்கு இந்த படம் நல்ல பெயரை வாங்கித்தரும் என்று எதிர்பார்த்த கொட்டாச்சிக்கு பெரிய ஏமாற்றமாகி விட்டதாம்.

அதனால், நாகேஷ் போன்ற சினிமாவில் நடிக்க வேண்டும் என்று வந்த எனக்கு அவரை நடிப்பது போன்றே நடிப்பதற்கு ஒரு வாய்பபு கிடைத்தும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையாகி விட்டதே என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் கொட்டாச்சி.


Post your comment





Related News
கிரிக்கெட் மற்றும் கபடியை கதாநாயகனாக கொண்டு உருவாகிவரும் "தோனி கபடி குழு" !
சாதனை இயக்குனரின் படைப்பில் உருவாகி உள்ள நாகேஷ் திரையரங்கம்.!
ஒரு தியேட்டரை மையப்படுத்தி உருவாகும் நாகேஷ் திரையரங்கம்!
நாகேஷ் இடத்தை நிரப்ப முடியாது :பேரன் கஜேஷ்
ஹீரோ ஆன நாகேஷ் பேரன்
பவர்ஸ்டார் நாகேஸ் வேடமா?-ஹா..ஹா..ஹி.. ஒரே சிப்பு சிப்பா வருது!
'நீர்க்குமிழி' ரீமேக்கில் நாகேஷ் வேடம் தாங்கும் விவேக்!
ரஜினியின் ராணாவில் வடிவேலு மற்றும் விவேக் - கே.எஸ். ரவிக்குமார் தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions