சாதனை இயக்குனரின் படைப்பில் உருவாகி உள்ள நாகேஷ் திரையரங்கம்.!

Bookmark and Share

சாதனை இயக்குனரின் படைப்பில் உருவாகி உள்ள நாகேஷ் திரையரங்கம்.!

ட்ரான்ஸ் இந்தியா மீடியா நிறுவனத்தின் திரு.இராஜேந்திர எம்.இராஜன் அவர்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் முதல் படைப்பு “நாகேஷ் திரையரங்கம்”.

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட “அகடம்” திரைப்படத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்த இசாக் இயக்கியுள்ள திரைப்படம் இது.

“நெடுஞ்சாலை”, “மாயா” படப்புகழ் ஆரி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” “இனிமே இப்படி தான்” படங்களில் நடித்த ஆஷ்னா சவேரி ஜோடியாக நடிக்கிறார்.

 காளி வெங்கட், மும்பை மாடல் மாசூம் சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். சிறிய இடைவேளைக்குப் பின் இந்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் எம்.ஜி.ஆர்.லதாவும், நடிகை சித்தாராவும் நடித்திருக்கிறார்கள்.

நௌஷாத் ஒளிப்பதிவில், ஸ்ரீ இசையில்,தேவராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள “நாகேஷ் திரையரங்கம்” வரும் பிப்ரவரி 16 அன்று வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் இன்று வரையிலும் எண்ணற்ற திகில் படங்களும் பேய் படங்களும் வந்திருந்தாலும் அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் கதையும் திரைக் கதையும் அமைத்துள்ளார் இயக்குனர் இசாக். 

திரையரங்கில் பேய் என்னும் புதிய கோணத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் திகில் பட பிரியர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 


Post your comment





Related News
ஒரு தியேட்டரை மையப்படுத்தி உருவாகும் நாகேஷ் திரையரங்கம்!
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே! காமெடியன் கொட்டாச்சி புலம்பல்
நாகேஷ் இடத்தை நிரப்ப முடியாது :பேரன் கஜேஷ்
ஹீரோ ஆன நாகேஷ் பேரன்
பவர்ஸ்டார் நாகேஸ் வேடமா?-ஹா..ஹா..ஹி.. ஒரே சிப்பு சிப்பா வருது!
'நீர்க்குமிழி' ரீமேக்கில் நாகேஷ் வேடம் தாங்கும் விவேக்!
ரஜினியின் ராணாவில் வடிவேலு மற்றும் விவேக் - கே.எஸ். ரவிக்குமார் தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions