பிப்ரவரி 28-ம் தேதி நடிகர் நகுல் திருமணம்!

Bookmark and Share

பிப்ரவரி 28-ம் தேதி நடிகர் நகுல் திருமணம்!

நடிகை தேவயானியின் சகோதரரும், நடிகருமான நகுலுக்கு வருகின்ற பிப்ரவரி 28ல் திருமணம் நடக்கவிருக்கிறது. தமிழில் வளர்ந்து வரும் நாயகர்களில் குறிப்பிடத்தகுந்தவர் நகுல்.

இவர் பாய்ஸ், காதலில் விழுந்தேன்,வல்லினம் மற்றும் தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் போன்ற படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். தற்போது நகுல் தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி பாஸ்கரை வருகின்ற பிப்ரவரி 28 ம் தேதி திருமணம் செய்து மண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கவிருக்கிறார்.

இவர்கள் இருவரின் திருமணமும் சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.மேலும் அதே நாளில் இருவரின் திருமண வரவேற்பும் நடைபெறுகிறது.

நகுல் தற்போது அமளி துமளி, நாரதன் ஆகிய படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். தனது சகோதரி தேவயானி பணியில் தற்போது நகுலும் தான் காதலித்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
தேவயானி மற்றும் நகுலின் தந்தை மரணம் - சோகத்தில் திரையுலகம்
‘செய்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் பிரபல பாகிஸ்தான் பாடகர்
நடிகர் கிருஷ்ணாவுக்கு தொடரும் சோகம்
ஆஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணுடன் ஜோடி சேரும் நகுல்!
சினிமா பின்னணி கதையில் நடிக்கும் நகுல்!
நகுலுடன் ஜோடி சேரும் பாலிவுட் நடிகை
நகுலின் திருமணம் இன்று நடைபெற்றது!
நகுலுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது: விரைவில் திருமணம்
கமல், அஜித்துடன் மோதும் நகுல்!
கவர்ச்சி கலந்து கருத்து சொல்லும் நகுல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions