நகுலின் அடுத்த நம்பிக்கை!

Bookmark and Share

நகுலின் அடுத்த நம்பிக்கை!

பாய்ஸ் படத்தில் சித்தார்த்துடன் இணைந்து நடித்தவர்களில் தேவயானியின் தம்பி நகுலும் ஒருவர். அதையடுத்து காதலில் விழுந்தேன் அவருக்கு பெரிய ஹிட்டாக அமைந்தது.

என்றாலும், அடுத்தடுத்து நடித்த மாசிலாமணி, கந்த கோட்டை, நான் ராஜாவாகப் போகிறேன், வல்லினம் ஆகிய படங்கள் அவருக்கு தொடர் தோல்விகளாக அமைந்தன.

இந்த நிலையில், அட்டகத்தி தினேசுடன் இணைந்து அவர் நடித்து வெளியான தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் என் படம் ஓரளவு வெற்றி பெற்றதோடு, அப்படத்தில் நகுல் ஏற்று நடித்த இளம் விஞ்ஞானி ரோல் அவரை மறுபடியும் பேச வைத்தது.  

அதனால், தற்போது நகுலுக்கு ஓரளவு மார்க்கெட் வேல்யூ ஏற்பட்டிருப்பதால், அவர் கடந்த இரண்டு ஆண்டுளாக நடித்து வந்த நாரதன் என்ற படத்தை விரைவில் முடித்து வெளியிடும் வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது.

இந்த படம் ஒரு நாளில் நடக்கும் கதையில் உருவாகியிருக்கிறதாம். அதோடு, ஆக்சன், காமெடி என இரண்டுவிதமான நடிப்பையும் கலந்து கட்டி நடித்திருக்கும் நகுல், இந்த படத்திற்கு பிறகு தனது மார்க்கெட் சூடுபிடிக்கும் என்று பெரிதாக நம்பிக்கொண்டிருக்கிறாராம்.


Post your comment





Related News
தேவயானி மற்றும் நகுலின் தந்தை மரணம் - சோகத்தில் திரையுலகம்
‘செய்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் பிரபல பாகிஸ்தான் பாடகர்
நடிகர் கிருஷ்ணாவுக்கு தொடரும் சோகம்
ஆஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணுடன் ஜோடி சேரும் நகுல்!
சினிமா பின்னணி கதையில் நடிக்கும் நகுல்!
நகுலுடன் ஜோடி சேரும் பாலிவுட் நடிகை
நகுலின் திருமணம் இன்று நடைபெற்றது!
பிப்ரவரி 28-ம் தேதி நடிகர் நகுல் திருமணம்!
நகுலுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது: விரைவில் திருமணம்
கமல், அஜித்துடன் மோதும் நகுல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions