ஆஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணுடன் ஜோடி சேரும் நகுல்!

Bookmark and Share

ஆஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணுடன் ஜோடி சேரும் நகுல்!

நடிகர் நகுல், பாலிவுட் நடிகை ஆஞ்சல், பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்து வெளிவர இருக்கும் படம் ‘செய்’. மேலும் இப்படத்தில் சந்திரிகா ரவி என்ற அழகிய புதுமுகத்தை ‘செய்’ படக்குழுவினர் அறிமுகம் செய்துள்ளனர். ஆஸ்திரேலிய வாழ் தமிழ் பெண்ணான இவர் மாடலிங் துறையில் இருந்து தமிழ் திரையுலகிற்கு வந்திருக்கிறார். 

‘செய்’ படத்தின் முலம் தமிழ் திரையுலகிற்குள் அடியெடுத்து வைக்கும் சந்திரிகா ரவி, 2014 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்திற்கான முதல் சுற்றில் தகுதி பெற்றவர். இதுமட்டுமில்லாமல் கூடுதல் அம்சமாக புதுமுக நடிகரை கோலிவுட்டிற்கு அறிமுகம் செய்ய இருக்கிறார்கள் படக்குழுவினர். 

ஆஸ்கர் அலி என்ற இந்த புதுமுகம் ‘கோ’ படத்தின் வில்லன் நடிகர் அஜ்மலின் தம்பி ஆவார். ராஜ்பாபு இயக்கத்தில், ராஜேஷ் கே.ராமன் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஒளிப்பதிவை விஜய் உலகநாதன் செய்துள்ளார்.

இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் நிக்ஸ் லோபஸ். ட்ரிப்பி டர்டில் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் மன்னு தயாரித்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இப்படத்தை அக்டோபர் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.


Post your comment





Related News
தேவயானி மற்றும் நகுலின் தந்தை மரணம் - சோகத்தில் திரையுலகம்
‘செய்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் பிரபல பாகிஸ்தான் பாடகர்
நடிகர் கிருஷ்ணாவுக்கு தொடரும் சோகம்
சினிமா பின்னணி கதையில் நடிக்கும் நகுல்!
நகுலுடன் ஜோடி சேரும் பாலிவுட் நடிகை
நகுலின் திருமணம் இன்று நடைபெற்றது!
பிப்ரவரி 28-ம் தேதி நடிகர் நகுல் திருமணம்!
நகுலுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது: விரைவில் திருமணம்
கமல், அஜித்துடன் மோதும் நகுல்!
கவர்ச்சி கலந்து கருத்து சொல்லும் நகுல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions