நகுலுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது: விரைவில் திருமணம்

Bookmark and Share

நகுலுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது: விரைவில் திருமணம்

 ‘பாய்ஸ்’ படத்தில் 5 கதாநாயகர்களில் ஒருவராக நடித்தவர் நகுல்.

இவர் நடிகை தேவயானியின் தம்பியாவார். ‘பாய்ஸ்’ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறவே, அப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவியத் தொடங்கின. 

அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட, சில நடிகர்கள் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த வரிசையில் நகுலும், தனக்கு கிடைத்த வாய்ப்பை எல்லாம் சரியாக பயன்படுத்தி இன்று தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களின் வரிசையில் இடம்பிடித்து உள்ளார். 

‘பாய்ஸ்’ படத்தை தொடர்ந்து நகுல் நடித்த ‘காதலில் விழுந்தேன்’, ‘மாசிலாமணி’, ‘நான் ராஜாவாக போகிறேன்’, ‘வல்லினம்’, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ ஆகிய படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.

சினிமாவில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறி வரும் நகுல், தனது சொந்த வாழ்க்கையிலும் அடுத்தக்கட்டத்துக்கு முன்னேறியிருக்கிறார். ஆம், நகுலுக்கும் ஸ்ருதி பாஸ்கர் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. 

இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு தங்கள் திருமணத்தை நிச்சயித்துள்ளனர். இந்த செய்தியை நகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதோடு, நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்டுள்ள படங்களையும் வெளியிட்டுள்ளார்.


Post your comment





Related News
தேவயானி மற்றும் நகுலின் தந்தை மரணம் - சோகத்தில் திரையுலகம்
‘செய்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் பிரபல பாகிஸ்தான் பாடகர்
நடிகர் கிருஷ்ணாவுக்கு தொடரும் சோகம்
ஆஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணுடன் ஜோடி சேரும் நகுல்!
சினிமா பின்னணி கதையில் நடிக்கும் நகுல்!
நகுலுடன் ஜோடி சேரும் பாலிவுட் நடிகை
நகுலின் திருமணம் இன்று நடைபெற்றது!
பிப்ரவரி 28-ம் தேதி நடிகர் நகுல் திருமணம்!
கமல், அஜித்துடன் மோதும் நகுல்!
கவர்ச்சி கலந்து கருத்து சொல்லும் நகுல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions