சினிமா பின்னணி கதையில் நடிக்கும் நகுல்!

Bookmark and Share

சினிமா பின்னணி கதையில் நடிக்கும் நகுல்!

நகுல் நடிப்பில் ‘செய்’ என்னும் பெயரில் புதுப்படம் உருவாக இருக்கிறது. இதில் நகுலுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆஞ்சல் நடிக்கிறார்.

மேலும் இவர்களுடன் பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள். கோபாலன் மனோஜ் இயக்கும் இப்படத்திற்கு நிக்ஸ் லோபஸ் இசையமைக்க இருக்கிறார்.

சினிமா பின்னணியிலான கதையில் உருவாகும் இப்படத்தின் பூஜை மற்றும் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இதில் நகுல் பேசும்போது, ‘நான் எப்போதும் தேர்ந்தெடுத்தே படங்களில் நடிப்பேன். யோசித்துதான் கதைகளைத் தேர்வு செய்வேன். இப்படத்தில் என் பாத்திரம் எனக்குப் பிடித்திருந்தது. அது வித்தியாசமாக இருக்கும்; படமும் மாறுபட்ட படமாக இருக்கும். இதில் நான் பங்குபெறுவதில் பெருமைப்படுகிறேன்'' என்றார்.

நாயகி ஆஞ்சல் பேசும்போது, ''தமிழில் இப்போது என்னால் பேச முடியவில்லை. இப்படம் நடிக்கும் போது தமிழ் பேசக் கற்றுக் கொள்வேன். படம் முடியும் போது நிச்சயம் தமிழில் பேசுவேன் என்று நம்புகிறேன்" என்றார்.

கதை, திரைக்கதை எழுதியுள்ள ராஜேஷ் கே.ராமன் பேசும்போது, "நமக்குள் நல்லது, கெட்டது, சாத்தான் எல்லாமும் இருக்கும். அதே போல இப்படத்திலும் நல்லது, கெட்டது எல்லாம் கலந்த வாழ்க்கை இருக்கும்.'' என்றார். 

இயக்குனர் கோபாலன் மனோஜ் பேசும்போது, ‘இது எனக்கு முதல் தமிழ்ப்படம். ஒரு பெரிய நடிகராக நினைக்கும் ஒரு பையனும், ஒரு பெரிய இயக்குனர் ஆக நினைக்கும் ஒரு பெண்ணும் சந்திக்கிறார்கள். அந்த சந்திப்பு அவர்களது வாழ்க்கையில் திருப்புமுனையை உண்டாக்குகிறது. இந்தச் சிறுவரிதான் கதை'' என்றார்.


Post your comment





Related News
தேவயானி மற்றும் நகுலின் தந்தை மரணம் - சோகத்தில் திரையுலகம்
‘செய்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் பிரபல பாகிஸ்தான் பாடகர்
நடிகர் கிருஷ்ணாவுக்கு தொடரும் சோகம்
ஆஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணுடன் ஜோடி சேரும் நகுல்!
நகுலுடன் ஜோடி சேரும் பாலிவுட் நடிகை
நகுலின் திருமணம் இன்று நடைபெற்றது!
பிப்ரவரி 28-ம் தேதி நடிகர் நகுல் திருமணம்!
நகுலுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது: விரைவில் திருமணம்
கமல், அஜித்துடன் மோதும் நகுல்!
கவர்ச்சி கலந்து கருத்து சொல்லும் நகுல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions