நடிகர் நகுல் காதல் திருமணம்

Bookmark and Share

நடிகர் நகுல் காதல் திருமணம்

நடிகை தேவயானிக்கு மயூர், நகுல் ஆகிய 2 தம்பிகள் இருக்கிறார்கள். தேவயானி டைரக்டர் ராஜகுமாரனை காதல் திருமணம் செய்து கொண்டது போல், அவருடைய மூத்த தம்பி மயூரும் காதல் திருமணம் செய்து கொண்டார்.

இப்போது அவர் மனைவி-குழந்தையுடன் புனேவில் வசித்து வருகிறார். இளைய தம்பி நகுல், ‘காதலில் விழுந்தேன்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். ‘மாசிலாமணி,’ ‘கந்த கோட்டை,’ ‘நான் ராஜாவாக போகிறேன்,’ ‘வல்லினம்’ ஆகிய படங்களிலும் நகுல் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அடுத்து இவர் நடித்துள்ள படம் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’.

இந்த படம் வெளியாவதையொட்டி அவர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நகுல் கூறியதாவது:- ‘‘நான், கடந்த 4 வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன். அவருடைய பெயரை இப்போது வெளியிட விரும்பவில்லை. அந்த பெண் சென்னையை சேர்ந்தவர்தான். ‘எம்.பி.ஏ.’ படித்து இருக்கிறார்.

ஆரம்பத்தில், ஒரு நட்சத்திர ஓட்டலில் சமையல் கலை நிபுணராக பணிபுரிந்து வந்தார். இப்போது வீட்டிலேயே கேக் மற்றும் இனிப்புகளை தயார் செய்து விற்பனை செய்கிறார். எனது நண்பர் ஒருவரின் பக்கத்து வீட்டில் என் காதலி வசித்து வருகிறார். நண்பர் மூலம் அவர் அறிமுகமானார். நட்பு காதலாகி, திருமணத்தில் முடிய இருக்கிறது.

எங்கள் காதலை அக்காள் (தேவயானி) உள்பட என் பெற்றோர்களும், காதலியின் பெற்றோர்களும் ஏற்றுக் கொண்டார்கள். இன்னும் இரண்டு மூன்று படங்களில் நான் நடித்து முடித்தபின், அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறேன்.’’
இவ்வாறு நடிகர் நகுல் கூறினார்.


Post your comment





Related News
தேவயானி மற்றும் நகுலின் தந்தை மரணம் - சோகத்தில் திரையுலகம்
‘செய்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் பிரபல பாகிஸ்தான் பாடகர்
நடிகர் கிருஷ்ணாவுக்கு தொடரும் சோகம்
ஆஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணுடன் ஜோடி சேரும் நகுல்!
சினிமா பின்னணி கதையில் நடிக்கும் நகுல்!
நகுலுடன் ஜோடி சேரும் பாலிவுட் நடிகை
நகுலின் திருமணம் இன்று நடைபெற்றது!
பிப்ரவரி 28-ம் தேதி நடிகர் நகுல் திருமணம்!
நகுலுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது: விரைவில் திருமணம்
கமல், அஜித்துடன் மோதும் நகுல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions