கவர்ச்சி கலந்து கருத்து சொல்லும் நகுல்!

Bookmark and Share

கவர்ச்சி கலந்து கருத்து சொல்லும் நகுல்!

காதலில் விழுந்தேன் படத்துக்குப்பிறகு நகுலுக்கு எந்த படமும் செட்டாகவில்லை. கதைக்காக தன்னை முழுசாக மாற்றி வருடக்கணக்கில் அவர் சிரத்தை எடுத்து நடித்தாலும் தியேட்டருக்கு வந்த வேகத்திலேயே அவரது படங்கள் ஓட்டம் பிடித்து விடுகின்றன.

அந்த வகையில், நகுலை அதிகம் ஏமாற்றிய படம் வல்லினம். இந்த படம் தனக்கு பெரிய பிரேக் கொடுக்கப்போகிறது என்று ரொம்ப எதிர்பார்த்திருந்தார் அவர்.

ஆனபோதும் அதன்பிறகு அவர் பெரிதாக எதிர்பார்க்காமல் நடித்த தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில் நகுல் நடித்த இளம் விஞ்ஞானி வேடம் அவருக்கு சாதகமாக அமைந்தது.

அதனால் அதற்கடுத்து அவர் நடித்திருந்த நாரதன் படம் உற்சாகத்துடன் வளர்ந்து வந்தது. ஆனால், சில காரணங்களால் அந்த படத்தின் தயாரிப்பாளரால் நகுலுக்கு பேசினபடி சம்பளம் கொடுக்க முடியாமல் திரைக்குப்பின்னால் சிறு சலசலப்பு ஏற்பட்டது.

ஆனால் இந்த படம் நாரத வேலைகளால் ஏற்படும் கலகங்களும், அதனால் ஏற்படும் நன்மைகளுமாக நல்ல கமர்சியல் கதையில் உருவாகியிருக்கிறதாம். அதோடு ஒரு பாடலில் இன்றைய இளவட்டங்களுக்கு ஜாலியாக கருத்தும் சொல்லியிருக்கிறாராம் நகுல்.

பழைய தத்துவப்பாடல்களைப் போன்று அந்த பாடல் அமைந்து விடக்கூடாது என்பதற்காக அந்த பாடலில் அவருடன் ஒரு அயிட்டம் நடிகையை ஆடவிட்டு கவர்ச்சி கலந்து கருத்து சொல்லியிருக்கிறார்களாம். ஆக, நாரதன் படம் இதுவரை இல்லாத வகையில் நகுலை ஒரு புதிய கோணத்தில்தான் வெளிப்படுத்தும் என்கிறார்கள்.


Post your comment





Related News
தேவயானி மற்றும் நகுலின் தந்தை மரணம் - சோகத்தில் திரையுலகம்
‘செய்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் பிரபல பாகிஸ்தான் பாடகர்
நடிகர் கிருஷ்ணாவுக்கு தொடரும் சோகம்
ஆஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணுடன் ஜோடி சேரும் நகுல்!
சினிமா பின்னணி கதையில் நடிக்கும் நகுல்!
நகுலுடன் ஜோடி சேரும் பாலிவுட் நடிகை
நகுலின் திருமணம் இன்று நடைபெற்றது!
பிப்ரவரி 28-ம் தேதி நடிகர் நகுல் திருமணம்!
நகுலுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது: விரைவில் திருமணம்
கமல், அஜித்துடன் மோதும் நகுல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions