எந்த ஹீரோவுக்கும் வில்லனாக தயார் : நகுல்

Bookmark and Share

எந்த ஹீரோவுக்கும் வில்லனாக தயார் : நகுல்

காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தக்கோட்டை, நான் ராஜாவாகப் போகிறேன் படங்களில் நடித்திருப்பவர் நகுல்.

அவர் கூறியது:வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். காதலில் விழுந்தேன் படத்தில் இறந்த காதலியின் உடலை சுமந்தபடி நடித்ததுமுதல் இது தொடர்கிறது. தற்போது திரைக்கு வந்திருக்கும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் கிட்டதட்ட சிறு விஞ்ஞானி போன்ற கேரக்டர்.

ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கி இருக்கிறார். யு டியூபில் பாடலை கேட்டமாத்திரத்தில் இப்படத்தைபற்றி விசாரித்த ரெட் ஜெயன்ட் உதயநிதி படத்தை ரிலீஸ் செய்வதாக கூறியது பெரிய பிளஸ்.

நெகடிவ் வேடங்களில் நடிப்பீர்களா என்கிறார்கள். ஹீரோக்கள் நெகடிவ் வேடத்தில் நடிப்பது சகஜமாகிவிட்டது. இமேஜ் பார்த்துக்கொண்டு நல்லபிள்ளையாகத்தான் நடிப்பேன் என்றால் அதை இப்போதுள்ள யூத்கள் ஏற்பதில்லை.

வித்தியாசமான கதாபாத்திரத்துடன் இருந்தால் எந்த ஹீரோவுக்கும் வில்லனாக நடிக்க தயார். எனக்கு நன்றாக இந்தி பேச வரும், இந்தி படத்திலும் நடிக்க ஆசை. இவ்வாறு நகுல் கூறினார்.


Post your comment





Related News
தேவயானி மற்றும் நகுலின் தந்தை மரணம் - சோகத்தில் திரையுலகம்
‘செய்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் பிரபல பாகிஸ்தான் பாடகர்
நடிகர் கிருஷ்ணாவுக்கு தொடரும் சோகம்
ஆஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணுடன் ஜோடி சேரும் நகுல்!
சினிமா பின்னணி கதையில் நடிக்கும் நகுல்!
நகுலுடன் ஜோடி சேரும் பாலிவுட் நடிகை
நகுலின் திருமணம் இன்று நடைபெற்றது!
பிப்ரவரி 28-ம் தேதி நடிகர் நகுல் திருமணம்!
நகுலுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது: விரைவில் திருமணம்
கமல், அஜித்துடன் மோதும் நகுல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions