நகுலுடன் ஜோடி சேரும் பாலிவுட் நடிகை

Bookmark and Share

நகுலுடன் ஜோடி சேரும் பாலிவுட் நடிகை

சங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்’ படத்தில் 5 கதாநாயகன்களில் ஒருவராக நடித்தவர் நகுல். இப்படத்தை அடுத்து ‘காதலில் விழுந்தேன்’, ‘மாசிலாமணி’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

நகுல் தற்போது கோபாலன் மனோஜ் என்பவர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் நகுலுக்கு ஜோடியாக ஆஞ்சல் என்ற பாலிவுட் நடிகை நடிக்க இருக்கிறார். இவர் இந்தியில் அமிதாப் பச்சனுடன் ‘ஆரக்‌ஷான்’, சன்னி தியோலுடன் ‘காயல் ஒன்ஸ் அகெய்ன்’, கரண் ஜோஹரின் ‘வி ஆர் பேமலி’ படங்களில் நடித்தவர். 

இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 26ம் தேதி தொடங்குகிறது. சென்னை, புதுச்சேரி, கர்நாடகா, கேரளாவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். பியான்ட் ஐ என்டர்டெயின்மென்ட் மற்றும் ட்ரிப்பி டர்டில் புரொடக்‌ஷன் இந்த புதிய படத்தை தயாரிக்கிறது.


Post your comment





Related News
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions