நலன்குமாரசாமியின் எஸ்கிமோ காதல்

Bookmark and Share

நலன்குமாரசாமியின் எஸ்கிமோ காதல்

முதல் படத்தில் மிகப்பெரிய வெற்றியை சந்தித்த இளைய தலைமுறை இயக்குநர்களுக்கு என்னாச்சு என்றே தெரியவில்லை. அடுத்தப் படத்தை ஆரம்பிக்க அநியாயத்துக்கு தயக்கம் காட்டுகின்றனர்.

முதல் படத்தில் கிடைத்த வெற்றியை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமே என்ற பயம் அளவுக்கதிகமாக அவர்களை பிடித்து ஆட்டுகிறது. அதுமட்டுமல்ல, முதல் படத்தை மிஞ்சுகிற அளவுக்கு இரண்டாவது படத்திலும் பெரிய வெற்றியை பெற வேண்டும் என்பதற்காக என்ன மாதிரியான கதையை தேர்வு செய்வது என்பதிலும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

நடுவுல கொஞ்சம் பக்கத்தக்காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன், அடுத்தப் படத்தை ஆரம்பிக்க சில வருடங்கள் எடுத்துக்கொண்டார். அவரைப் போலவே முதல் படத்தில் பெரிய வெற்றியடைந்தவர் சூது கவ்வும் படத்தை இயக்கிய நலன்குமாரசாமி.

சூது கவ்வும் படம் வெளியாகி வருடங்கள் உருண்டோடியநிலையில் இப்போதுதான் அடுத்தப்படத்தைத் தொடங்குகிறார் நலன்குமாரசாமி. எஸ்கிமோ காதல் என பெயரிடப்பட்டுள்ள நலன் குமாரசாமியின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார்.


Post your comment





Related News
கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!
காதல் மட்டுமில்லை கல்யாணமும் கடந்து போகும்- நலன் குமாரசாமி
இயக்குநர் நலன் குமாரசாமிக்கு திருமணம்: விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி நேரில் வாழ்த்து
திரையரங்குகளில் தேசிய கீதம்: உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
வல்லதேசம் இசையமைப்பாளரின் இசை ஆல்பத்தை வெளியிடும் கலைப்புலி எஸ்.தாணு
சிபிராஜ் படத்தில் நடிக்கும் நலன் குமாரசாமி!
நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்கும் வடிவேலு?
தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நலன் குமாரசாமி
நயன்தாரா சொதப்பல்...! நலனுக்கு லாபம்....!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions