தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நலன் குமாரசாமி

Bookmark and Share

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நலன் குமாரசாமி

‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நலன் குமாரசாமி. இப்படத்தின் வெற்றி இவரை தமிழ் சினிமாவில் பிரபலமாக பேச வைத்தது.

இதையடுத்து, இவருடைய இயக்கத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க ஆர்வமாக இருந்தனர். இருப்பினும், தனது முந்தைய படத்தின் ஹீரோவான விஜய் சேதுபதியை வைத்தே தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். 

இயக்குனராக வெற்றி பெற்ற நலன் குமாரசாமி, தற்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவர் தனது நண்பர் சமீர் பரத் ராமுடன் இணைந்து பின்ரோம் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

இந்நிறுவனம் மூலம் தற்போது ‘உறியடி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தை பிரபல ‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியில் பங்குபெற்ற விஜயகுமார் என்பவர் இயக்குகிறார். இப்படம் பழிவாங்கும் திரில்லர் கதையாக உருவாகவுள்ளது. 1990-களில் வாழும் இளைஞர்களை மையமாக வைத்து எடுக்கவுள்ளது. 

இதைத் தொடர்ந்து பொதுவான விஷயங்களை உள்ளடக்கிய ஆறு குறும்படங்களையும் தயாரிக்கவுள்ளனர். மேலும், தனது சொந்த தயாரிப்பில் ஒரு குறும்படம் இயக்கவும் நலன் விருப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
உண்மை சம்பவம்- கந்துவட்டி தற்கொலை “பொதுநலன்கருதி”!
தமிழ் சினிமாவை இழுத்து மூடுங்கள் - வசந்த பாலன் ஆவேச பேச்சு
கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!
காதல் மட்டுமில்லை கல்யாணமும் கடந்து போகும்- நலன் குமாரசாமி
இயக்குநர் நலன் குமாரசாமிக்கு திருமணம்: விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி நேரில் வாழ்த்து
திரையரங்குகளில் தேசிய கீதம்: உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
வல்லதேசம் இசையமைப்பாளரின் இசை ஆல்பத்தை வெளியிடும் கலைப்புலி எஸ்.தாணு
சிபிராஜ் படத்தில் நடிக்கும் நலன் குமாரசாமி!
நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்கும் வடிவேலு?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions