நளினி செய்த அதிரடி மாற்றங்கள்!

Bookmark and Share

நளினி செய்த அதிரடி மாற்றங்கள்!

நடிகை நளினி சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு தலைவராக பெறுப்பேற்ற பிறகு சில அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அதாவது, தமிழ் சேனல்களில் வடஇந்தியாவில் தயாரான டப்பிங் சீரியல்கள் அதிகமாக ஒளிபரப்பாகி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர், அதற்கான போராட்டம் ஒன்றையும் நடத்தினார்.

அதையடுத்து நடிகர் நடிகைகள் பெருந்திரளான டிவி சேனல் அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று டப்பிங் சீரியல்களை நிறுத்தி விட்டு தமிழில் நேரடியாக தயாரிக்கப்படும் சீரியல்களையே ஒளிபரப்புமாறு கேட்டுக்கொண்டனர்.

அதற்கு ஓரளவு வெற்றியும் கிடைத்தது. அதோடு, சின்னத்திரை நடிகர் சங்கத்தில் அவர் தலைவரானபோது போதுமான நிதி கையிருப்பு இல்லாமல் இருந்ததாம். அதனால் பிரபலமான டிவி நடிகர் நடிகைகளை ஒன்று சேர்த்து வெளிநாடுகளில் சில கலைநிகழ்ச்சிகளை நடத்தினாராம் நளினி.

அதையடுத்து இப்போது சங்கத்துக்கு ஓரளவு பண்ட் சேர்ந்திருக்கிறதாம். இதுதவிர சின்னத்திரை நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு பொறியியல் கல்லூரியில் படிக்க இலவசமாக சீட் வாங்கியும் கொடுத்து வருகிறாராம் நளினி. 


Post your comment





Related News
இதுவரை பலருக்கும் தெரியாத நளினியின் மகள் - வைரலாகும் புகைப்படம்.!
வாய் பிளக்க வைக்கும் சீரியல் நடிகைகளின் சம்பளம் - அம்மாடி இவ்வளவா?
நகல் படத்தில் நடிக்க சம்மதித்தது இந்த ஒரு காரணத்தால் தான்- மிருணாளினி
டப்மாஷ் மிருனாளினிக்கு இப்படி ஒரு வாய்ப்பா?
பாலாவிற்கு கூட நோ தான், அந்த இயக்குனர் படம் என்றால் ஓகே- டப்மாஷ் புகழ் மிருனாளனி
தெலுங்கு சீரியலில் பிசியான 'சின்னப் பாப்பா'
நளினி ராஜினாமா செய்தார்..! டிசம்பரில் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்
நடிகை நளினி, ராதிகாவுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க சிபிசிஐடி போலீசில் சரத்குமார், நளினி மனு
சன் டிவியில் மீண்டும் சண்டை போட வரும் சின்ன பாப்பா பெரிய பாப்பா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions