பொட்டு படத்தில் அபூர்வசக்தி கொண்ட மந்திரவாதியாக நமீதா!

Bookmark and Share

பொட்டு படத்தில் அபூர்வசக்தி கொண்ட மந்திரவாதியாக நமீதா!

தமிழ் படமுன்னணி நடிகையாக வலம் வந்தவர் நமீதா. பிரபல ஹீரோக்களின் ஜோடியாகவும், கவர்ச்சி வேடத்திலும் கலக்கிய இவர் ரசிகர்களின் மனதில் கனவுக் கன்னியாக இடம் பிடித்தார்.

‘மச்சான்ஸ்’ என்ற வார்த்தையை விதம் விதமாக சொல்லி மகிழ வைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு உள்பட பல மொழிகளில் நடித்து வந்த நமீதா நடிப்புக்கு சமீபகாலமாக சிறிய இடைவெளி ஏற்பட்டது. இப்போது மீண்டும் தமிழ் திரை உலகில் மறு பிரவேசம் செய்து இருக்கிறார்.

பரத் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘பொட்டு’. இதில் நமீதா நடிக்கிறார். இனியா, சிருஷ்டி டாங்கே ஆகிய நாயகிகளும் நடிக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமையா, பரணி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஊர்வசி, ஷாயாஜிஷிண்டே, மன்சூர்அலிகான் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

வடிவுடையான் இயக்கும் இந்த படத்தில் நமீதா அபூர்வ சக்திகளை அடக்கி ஆளும் பெண் மந்திரவாதியாக நடிக்கிறார்.

பரத் மருத்துவ கல்லூரி மாணவராக நடிக்கிறார். பேய் படமாக இது உருவாகிறது.

“மூன்று நாயகிகளில் ஒருவரான நமீதா வித்தியாசமான வேடத்தில் நடித்து அசத்தி இருக்கிறார். இது அவருக்கு திருப்புமுனை படமாக அமையும்” என்று படக் குழுவினர் தெரிவித்தனர்.

இனியன் ஹரீஷ் ஒளிப்பதிவு செய்யும் ‘பொட்டு’ படத்துக்கு அம்ரீஷ் இசை அமைக்கிறார். ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.


Post your comment





Related News
மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்!
திருமணத்திற்கு பிறகு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட நமிதா - ஷாக்காக்கும் புகைப்படம்.!
“நடிகைகளை திருமணம் செய்து கொள்ள ஏன் தயங்குகிறார்கள்” - நடிகை நமீதா வேதனை
திருமணத்திற்கு பிறகு நமிதா பார்த்த முதல் படம் என்ன தெரியுமா? - நீங்களே பாருங்க.!
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
பிரபல விஜய் டிவி நடிகரை அழவைத்த நடிகை நமீதா!
தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை
திருமணம் முடிந்து வீர் நமீதாவுக்கு பப்ளிக்காக கொடுத்த பரிசு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions