கவர்ச்சியிலிருந்து ஹோம்லிக்கு மாரிய நமிதா!

Bookmark and Share

கவர்ச்சியிலிருந்து ஹோம்லிக்கு மாரிய நமிதா!

தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ரவுண்ட் வந்த நடிகை நமீதா  ஆனால் சமீபகாலமாக அவருக்கு சரியான வாய்ப்புகள் இல்லை. எனவே வேலை இல்லாமல் பல சுற்று உடல் பெருத்து காணப்பட்டார். 
இதனால் நமீதாவுக்கு சான்ஸ் கொடுக்க நினைத்தவர்கள் கூட அவரது தோற்றத்தைப்பார்த்து வரவில்லை. இந்த நிலையில், கடின உடற்பயிற்சி, டயட்ஸ் மூலம் 20 கிலோ உடல் எடையை குறைத்து தற்போது ஆரம்பகால நமீதாவைப் போன்று ஸ்லிம்மாகி விட்டார். அதனால் கோலிவுட்டில் தற்போது சில புதிய படங்களில் கமிட்டாகியுள்ளார் நமீதா. 

இந்த நிலையில், கன்னடத்தில் ஒரு படத்தில் நடிக்கும் நமீதா, தற்போது மலையாளத்தில் மோகன்லாலுடனும் புலிமுருகன் என்ற படத்தில் நடிக்கிறார். இதே படத்தில் வேட்டையாடு விளையாடு படத்தில் கமலுடன் நடித்த கமாலினி முகர்ஜி ஹீரோயின் என்றபோதும், நமீதாவும் முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடிக்கிறார்.

மேலும், இதற்கு முன்பு வரை கவர்ச்சி ஹீரோயின் என்ற இமேஜூடன் நடித்து வந்த நமீதா மலையாள படத்தில் பக்கா ஹோம்லியான வேடத்தில் நடிக்கிறாராம்.

தமிழில் அவர் நடிக்க பேசியுள்ள படத்தில் கூட குடும்பப் பாங்கான வேடத்தில் நடிக்கயிருப்பதாகவே தெரிகிறது. ஆக, கவர்ச்சி நடிகை நமீதா ஹோம்லி ரவுண்ட்டை ஆரம்பித்திருக்கிறார்.


Post your comment





Related News
மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்!
திருமணத்திற்கு பிறகு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட நமிதா - ஷாக்காக்கும் புகைப்படம்.!
“நடிகைகளை திருமணம் செய்து கொள்ள ஏன் தயங்குகிறார்கள்” - நடிகை நமீதா வேதனை
திருமணத்திற்கு பிறகு நமிதா பார்த்த முதல் படம் என்ன தெரியுமா? - நீங்களே பாருங்க.!
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
பிரபல விஜய் டிவி நடிகரை அழவைத்த நடிகை நமீதா!
தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை
திருமணம் முடிந்து வீர் நமீதாவுக்கு பப்ளிக்காக கொடுத்த பரிசு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions