பணத்துடன் மானேஜர் ஓட்டம்: நடிகை நமீதாவிடம் மோசடி

Bookmark and Share

பணத்துடன் மானேஜர் ஓட்டம்: நடிகை நமீதாவிடம் மோசடி

நமீதா சினிமா படங்களில் நடிப்பதோடு கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். வெளிநாடுகளில் நடக்கும் நடன நிகழ்ச்சிகளுக்கும் போகிறார். உள்ளூர்களில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். நகை கடை ஜவுளிக்கடை திறப்புகளிலும் பங்கேற்கிறார். இதற்காக அவருக்கு குறிப்பிட்ட தொகையை சம்பளமாக கொடுத்து ஒப்பந்தம் செய்கின்றனர்.

சமீபத்தில் குஜராத் மாநிலம் சூரத்தில் நடன நிகழ்ச்சியொன்றுக்கு ஏற்பாடு செய்தனர். இதில் நடனமாடுவதற்கு நமீதாவை அழைத்தனர். குறிப்பிட்ட தொகையை சம்பளமாக தருவதாகவும் பேசினார். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் ஏற்கனவே பல தடவை நமீதாவை அழைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளனர்.

சம்பளமும் ஒழுங்காக கொடுத்து இருக்கிறார்கள். எனவே சூரத்தில் நடனமாட சம்மதித்தார். இதில் ஆடுவதற்காக சில பாடல்களில் நடன மாடி சூரத்தில் ரிகர்சலும் எடுத்தார்.
நடனம் ஆடிய பிறகு பேசிய தொகையை நமீதாவுக்கு கொடுக்கவில்லை.

பணத்துடன் மானேஜர் தலைமறைவாகி விட்டார். அவரது போனில் நமீதா தொடர்பு கொண்டார். அதுவும் சுவிட்ச்ஆப் ஆகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து நமீதா கூறும்போது,

நடன நிகழ்ச்சிக்கு எனக்கு தர வேண்டிய பணத்தை தராமல் மோசடி செய்து விட்டனர். சக நடிகைகளும் இதுபோல் ஏமாறச் கூடாது. பேசிய பணத்தை முன் கூட்டியே வாங்கி விட வேண்டும் என்றார்.


Post your comment





Related News
திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்
மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்!
திருமணத்திற்கு பிறகு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட நமிதா - ஷாக்காக்கும் புகைப்படம்.!
“நடிகைகளை திருமணம் செய்து கொள்ள ஏன் தயங்குகிறார்கள்” - நடிகை நமீதா வேதனை
திருமணத்திற்கு பிறகு நமிதா பார்த்த முதல் படம் என்ன தெரியுமா? - நீங்களே பாருங்க.!
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
பிரபல விஜய் டிவி நடிகரை அழவைத்த நடிகை நமீதா!
தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions