குடும்பத்தினருடன் நமீதா திருப்பதி கோவிலில் சாமி தரிசனம்!

Bookmark and Share

குடும்பத்தினருடன் நமீதா திருப்பதி கோவிலில் சாமி தரிசனம்!

நடிகை நமீதா சட்டசபை தேர்தலுக்கு முன் முதல்–அமைச்சர் ஜெயலலிதா சந்தித்து அ.தி.மு.க.வில் சேர்ந்து அரசியலில் குதித்தார். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து நடிகை நமீதா குடும்பத்தினருடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

கோவிலை விட்டு வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்தனர். அவர்களைப் பார்த்து நமீதா இரட்டை விரலை காட்டி மகிழ்ச்சி தெரிவித்தார். அப்போது அவரை நிருபர்கள் சந்தித்தனர். தேர்தல் வெற்றி குறித்து கருத்து கேட்டனர்.

நமீதா கூறுகையில், தமிழ் நாட்டில் முதல்–அமைச்சர் அம்மா நிறைவேற்றிய நலத்திட்டங்களால் அவருக்கு வெற்றி கிடைத்தது. அம்மா தான் ஜெயிப்பார் என்று எல்லோருக்கும் தெரியும்.

அவரது நல்லாட்சி தொடர்வதற்கு மக்கள் வாக்களித்தனர். தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து நான் என் குடும்பத்தினருடன் திருப்பதி வந்து சாமி தரிசனம் செய்து வேண்டுதல் நிறைவேற்றினேன் என்றார்.

அ.திமு.க. சார்பில் மேல்– சபை எம்.பி. ஆவீர்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு நமீதா பதில் அளிக்காமல் சென்று விட்டார்.


Post your comment





Related News
மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்!
திருமணத்திற்கு பிறகு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட நமிதா - ஷாக்காக்கும் புகைப்படம்.!
“நடிகைகளை திருமணம் செய்து கொள்ள ஏன் தயங்குகிறார்கள்” - நடிகை நமீதா வேதனை
திருமணத்திற்கு பிறகு நமிதா பார்த்த முதல் படம் என்ன தெரியுமா? - நீங்களே பாருங்க.!
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
பிரபல விஜய் டிவி நடிகரை அழவைத்த நடிகை நமீதா!
தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை
திருமணம் முடிந்து வீர் நமீதாவுக்கு பப்ளிக்காக கொடுத்த பரிசு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions