பெண்கள் தற்காப்புக்காக ஆயுதங்கள் வைத்துக் கொள்ளவேண்டும்- நமீதா அறிவுரை

Bookmark and Share

பெண்கள் தற்காப்புக்காக ஆயுதங்கள் வைத்துக் கொள்ளவேண்டும்- நமீதா அறிவுரை

பிரபல இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்திவேல் நாயகனான நடித்துள்ள புதிய படம் ‘தற்காப்பு’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்திஉள்ளனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நமீதா பேசும்போது,

தற்காப்பு என்பது தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்வது. தற்காப்பு ஆண்களை விட பெண்களுக்கு இன்றைய சூழலில் மிக அவசியம். நான் மாடலிங்கில் நுழையும்போது ‘நீங்க பெரிய பிசினஸ்மேனோட பொண்ணு.

ஏன் இந்த ஃபீல்டுக்குள்ளலாம் வர்றே?’ என்ற ரீதியில் கேள்விகள் வந்தன. அவர்களுக்கு நான் சொன்ன பதில் ‘நமீதா என்பது என்னுடைய பெயர். அந்த பெயர் தெரிவதற்காக நான் ஏதாவது செய்ய வேண்டும்.

என்னதான் அப்பாவாக இருந்தாலும் அவர் வேறு நான் வேறு தான்’. இப்படி விட்டுக்கொடுக்காமல் போராடியதால் தான் மிஸ்.யுனிவர்ஸில் மூன்றாவது இடம் அளவுக்கு முன்னேற முடிந்தது. இதுபோல இன்றைய பெண்கள் தங்கள் பெயர் தனித்து தெரிய வேண்டும் என்று தங்களுக்கு பிடித்த துறையில் சாதிக்க முயல வேண்டும். 

என்னுடைய சிறு வயதில் பேருந்துகளில் பயணிக்கும்போது என்னிடம் கூட சில ஆண்கள் தவறாக நடக்க முயற்சிப்பார்கள். அவர்களை விரட்ட நான் பயன்படுத்திய ஆயுதம் சேஃப்டி பின். அது எப்போதுமே என்னுடன் இருக்கும்.

கொஞ்சம் வளர்ந்த உடன் பெப்பர் ஸ்ப்ரே பயன்படுத்த ஆரம்பித்தேன். சேஃப்டி பின், பெப்பர் ஸ்ப்ரே இரண்டுமே பெண்கள் அவசியம் கையில் வைத்துக்கொள்ள வேண்டியவை. நமக்கான தற்காப்பு ஆயுதங்கள் அவை என்று கூறினார்.


Post your comment





Related News
மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்!
திருமணத்திற்கு பிறகு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட நமிதா - ஷாக்காக்கும் புகைப்படம்.!
“நடிகைகளை திருமணம் செய்து கொள்ள ஏன் தயங்குகிறார்கள்” - நடிகை நமீதா வேதனை
திருமணத்திற்கு பிறகு நமிதா பார்த்த முதல் படம் என்ன தெரியுமா? - நீங்களே பாருங்க.!
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
பிரபல விஜய் டிவி நடிகரை அழவைத்த நடிகை நமீதா!
தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை
திருமணம் முடிந்து வீர் நமீதாவுக்கு பப்ளிக்காக கொடுத்த பரிசு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions