பிருத்விராஜூடன் ஜோடி சேர்ந்தார் நமீதா..!

Bookmark and Share

பிருத்விராஜூடன் ஜோடி சேர்ந்தார் நமீதா..!

கிட்டத்தட்ட பதினொன்றாவது முறையாக அண்ணன் தம்பியான பிருத்விராஜ், இந்திரஜித் இருவரும்  'அமர் அக்பர் ஆண்டனி' என்கிற மலையாள படத்தில், அமர், அக்பராக இணைந்து நடிக்க இருக்கிறார்கள்..

மூன்றாவதாக ஆண்டனி கேரக்டரில் ஜெயசூர்யா நடிக்கிறார். 'கிளாஸ்மேட்ஸ்' படத்தை தொடர்ந்து ஒன்பது வருடம் கழித்து இவர்கள் மூவரும் இணைந்து நடிக்கும் படம் இது.  

பாடகர், சின்னத்திரை நடிகர், காமெடி நடிகர் என பல அடையாளங்களுடன் வலம் வரும் நடிகர் நாதிர்ஷா இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக மாறுகிறார்.. இந்தப்படத்தில் கதாநாயகியாக முதலில் வேதிகா நடிக்க இருக்கிறார் என்றார்கள்.

ஆனால் தற்போது பிருத்விராஜுக்கு ஜோடியாக நமீதா பிரமோத் தான் நடிக்கிறார் என்பது தற்போது உறுதியாகி உள்ளது. நமீதா என்றதும் நம்ம பப்ளிமாஸ் நமீதா என்று ஒருகணம் நினைத்தீர்கள் தானே..? நடிக்க ஆரம்பித்ததில் இருந்து பெரும்பாலும் முன்னணி நாயகர்களுடன் மட்டுமே நடித்து வருவது இவரது அதிர்ஷ்டம் என்றே சொல்லவேண்டும்..

திலீப்புடன் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள நமீதா பிரமோத், துல்கர் சல்மான், குஞ்சாக்கோ ஆகியோரை தொடர்ந்து தற்போது பிருத்விராஜுக்கு ஜோடியாக மாறியுள்ளதால் அவரது கனவு நனவாகிவிட்டதாக சந்தோஷத்தில் குதிக்கிறாராம். நமீதா மலையாள சினிமாவில் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.. 


Post your comment





Related News
மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்!
திருமணத்திற்கு பிறகு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட நமிதா - ஷாக்காக்கும் புகைப்படம்.!
“நடிகைகளை திருமணம் செய்து கொள்ள ஏன் தயங்குகிறார்கள்” - நடிகை நமீதா வேதனை
திருமணத்திற்கு பிறகு நமிதா பார்த்த முதல் படம் என்ன தெரியுமா? - நீங்களே பாருங்க.!
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
பிரபல விஜய் டிவி நடிகரை அழவைத்த நடிகை நமீதா!
தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை
திருமணம் முடிந்து வீர் நமீதாவுக்கு பப்ளிக்காக கொடுத்த பரிசு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions