காலாவில் வில்லன், நிஜத்தில் ஹீரோ - இது தான் நானா படேகர்

Bookmark and Share

காலாவில் வில்லன், நிஜத்தில் ஹீரோ - இது தான் நானா படேகர்

காலா படத்தில் அடித்தட்டு மக்களின் இடத்தை அச்சுறுத்தி பிடுங்கும் அரசியல்வாதியாக நடித்த இந்தி நடிகர் நானா படேகர் நிஜத்தில் அதற்கு நேர் எதிர் குணம் கொண்டவர்.

சினிமா மூலம் சம்பாதித்ததை எல்லாம் மக்களுக்காகச் செலவழித்துவிட்டு ஒற்றை பிளாட்டில் வசிக்கிறார். மகாராஷ்டிரத்தில் மராத்வாடா பகுதியில் 2015ம் ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டது. விவசாய நிலங்கள் வெடித்தன.

ஆடுமாடுகள் செத்து மடிந்தன. விவசாயிகள் கொத்துக்கொத்தாக தற்கொலை செய்துகொண்டனர். விவசாயிகளின் தற்கொலை நானா படேகரின் மனதை வெகுவாகப் பாதித்தது. சக நடிகர் மன்கர்டுடன் இணைந்து நாம் என்னும் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கினார்.

முதல் நாளே அறக்கட்டளைக்கு 80 லட்சம் ரூபாய் கிடைத்தது. ஒரே வாரத்தில் 7 கோடி ரூபாய் திரண்டது. இரவு பகலாக விவசாயிகளை நேரில் சந்தித்து இந்த நிதியை வழங்கினார்.மும்பை, தானே, புனே, நாக்பூர், அவுரங்கபாத் நகரங்களில் ‘நாம்‘ அறக்கட்டளை தற்போது இயங்கிவருகிறது. கணவரை இழந்த பெண்களுக்கு மறு வாழ்க்கை அமைத்துக்கொடுப்பது.

இளம் பெண்களுக்கு சுய தொழில் கற்றுக் கொடுப்பது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது போன்ற பல்வேறு அறப்பணிகளில் இந்த அமைப்பு ஈடுபடுகிறது. நானா படேகரை நிஜ ஹீரோ என்று புகழ்கின்றனர்.


Post your comment





Related News
ராஜ ராஜ சோழன் வரலாற்றை படமாக எடுக்கும் எஸ்.பி.ஜனநாதன்
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
கஜினிகாந்தை குடும்பத்துடன் பார்க்கலாம் - இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் நம்பிக்கை
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
பெண்கள் மனதை கொள்ளை அடித்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் நிலை என்ன தெரியுமா?
தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்தது ஏன்? ஞானவேல்ராஜா விளக்கம்
இசைவெளியீட்டு விழாவில் நடிகரை வருத்தெடுத்த கே.இ.ஞானவேல் ராஜா
டி.வி.களுக்கு ஏன் படங்களை இலவசமாக வழங்க வேண்டும்: காப்புரிமை பிரச்சனை எழுப்பும் ஞானவேல்ராஜா
"உன்னை தேடி வருவேன் ****!" பொது மேடையில் கெட்டவார்த்தையில் திட்டிய ஞானவேல் ராஜா
இந்திய ராணுவ வீரர்கள் தான் உண்மையான ஹீரோக்கள்: நானா படேகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions