நண்பர்கள் நற்பணி மன்றம் ராதாபாரதிக்கு கைகொடுக்குமா?

Bookmark and Share

நண்பர்கள் நற்பணி மன்றம் ராதாபாரதிக்கு கைகொடுக்குமா?

வைகாசி பொறந்தாச்சு, கிழக்கே வரும் பாட்டு போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் ராதாபாரதி. நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் இயக்கும் படம் நண்பர்கள் நற்பணி மன்றம். செங்குட்டுவன், அக்ஷயா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகரன் வில்லனாக நடிக்கிறார். இவர்கள் தவிர ஆடுகளம் நரேன், சிங்கம்புலி, நான் கடவுள் ராஜேந்திரனும் நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார்.

"முன்பு என் படங்கள் சென்டிமெண்டை மையமாக கொண்டிருக்கும். இந்தப் படத்தை இன்றைய டிரண்டுக்கு ஏற்ற மாதிரி எடுத்திருக்கிறேன். நட்பா? காதலா? என்ற கேள்விக்கு விடை தேடி நிறைய படங்கள் வந்திருக்கிறது. இது அந்த கேள்வியை இன்னொரு கோணத்தில் அணுகி, அதற்கு புதிய தீர்வையும் சொல்கிறது" என்கிறார் ராதாபாரதி. நண்பர்கள் நற்பணி மன்றம் அவருக்கு கைகொடுக்குமா என்பது படம் ரிலீசான பிறகு தெரியும்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions