ராஜேந்திரனை நம்பும் நண்பர்கள் நற்பணி மன்றம்

Bookmark and Share

ராஜேந்திரனை நம்பும் நண்பர்கள் நற்பணி மன்றம்

வைகாசி பொறந்தாச்சி, கிழக்கே வரும் பாட்டு போன்ற படங்களை இயக்கிய ராதாபாரதி நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி இருக்கும் படம் 'நண்பர்கள் நற்பணி மன்றம்'. செங்குட்டுவன், அக்ஷயா என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

ஆர்.எஸ்.செல்வா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். இவனுக்கு தண்ணியில கண்டம் படத்தில் நான் கடவுள் ராஜேந்திரன் காமெடி பேசப்பட்டதை தொடர்ந்து இந்தப் படத்திலும் அவரது காமெடியை பெரியதாக நம்பி உள்ளனர்.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் ராதாபாரதி கூறியதாவது: காதல் வரைக்கும் உடன் இருக்கும் நண்பர்கள் கல்யாணத்துக்கு பிறகு உதவுகிறார்களா? அவர்கள் நட்பு எதுவரை இருக்கிறது என்பதை சொல்லும் படம்.

எனது முந்தைய படங்கள் நிறைய செண்டிமென்டுகளுடன் இருக்கும் இதனை இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப உருவாக்கி இருக்கிறேன். வில்லனாக அறிமுகமானாலும் நான் கடவுள் ராஜேந்திரன் நல்ல காமெடியானாக வளர்ந்து வருகிறார்.

அவரை இந்தப் படத்தில் முழு நீள காமெடியனாக நடிக்க வைத்திருக்கிறேன். மட்டன் ஸ்டால் வைத்திருக்கும் அவர் ஆடுகளின் மீது மிகுந்த பாசம் கொண்டவர்.

வெட்டப்பட்ட ஆட்டிற்காக ஒரு சொட்டு கண்ணீர்விடுவார். இப்படி கருணையும், கொலையும் கலந்த ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த கமெடி பரவலாக பேசப்படுவதாக இருகும். என்றார்.


Post your comment





Related News
பகையை அழிக்கச் சொல்லும் கதை!
நண்பர்கள் நற்பணி மன்றம் ராதாபாரதிக்கு கைகொடுக்குமா?
“நண்பர்கள் கவனத்திற்கு” படத்தின் ஆடியோ ரிலீஸில் - 'இளைய கவிப்பேரரசு' சினேகனின் அலறல் !
சரத்குமாரின் குழந்தையாக‌ நடித்த மனீஷாஜித் ஹீரோயினாகும் படம் -'நண்பர்கள் கவனத்திற்கு'!
விஜய்,விஜயகாந் ரசிகர்கள் மோதல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions