பகையை அழிக்கச் சொல்லும் கதை!

Bookmark and Share

பகையை அழிக்கச் சொல்லும் கதை!

அப்போது ‘வைகாசி பொறந்தாச்சு’ சில்வர் ஜூப்ளி ஹிட். இப்போது ‘நண்பர்கள் நற்பணி மன்றம்’ ஹிட்டுக்காக காத்திருக்கிறார் இயக்குனர்.  முதல் படம் வெளிவந்து 25 ஆண்டுகள் ஆகியும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவர். இறுதிக்கட்ட பணியில் மும்முரமாக இருந்த ராதாபாரதியிடம் கை குலுக்கி ஆரம்பித்தோம்...

ரீ-என்ட்ரி எப்படி இருக்கிறது?

நான் நினைத்ததைவிட சுலபமாக இருக்கிறது. அப்போது நாம் எடுத்த காட்சிகளை பார்க்க வேண்டும் என்றால் லேப், லேப்பாக அலைய வேண்டும். இப்போது டிஜிட்டல் உலகம் என்பதால் உட்கார்ந்த இடத்திலேயே காட்சிகளைப் பார்க்கும் வசதி வந்துவிட்டது. பகைவனை அழிப்பதை விட ‘பகை’யை அழிக்க வேண்டும் என்பதுதான் படத்தோட மெசேஜ். ஹீரோ, ஹீரோயின் லவ்வுக்கு நண்பர்கள் எப்படி உதவி செய்கிறார்கள் என்பதை கலகலப்பாக சொல்லி யிருக்கிறேன்.

கதாநாயகனாக செங்குட்டுவன் அறிமுகமாகிறார். நாயகியாக அக்ஷதா நடிக்கிறார். முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக அக்ஷதா தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறார். இவர்களோடு அன்பாலயா பிரபாகரன், இமான் அண்ணாச்சி, ‘ஆடுகளம்’ நரேன், சிங்கம்புலி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் நடிக்கிறார்கள்.

தேவா-ஸ்ரீகாந்த் தேவா இருவரிடம் உள்ள வித்தியாசம்?

தேவா செம ஸ்பீடாக வேலை செய்வார். ஸ்ரீ அப்படியில்லை. இப்போதுள்ள டிரெண்டை உன்னிப்பாக கவனித்து,  நிறுத்தி நிதானமாக வேலை செய்வார். மற்றபடி அப்பா, மகன் இருவரும் மிகப் பெரிய ஜீனியஸ்.


Post your comment





Related News
ராஜேந்திரனை நம்பும் நண்பர்கள் நற்பணி மன்றம்
நண்பர்கள் நற்பணி மன்றம் ராதாபாரதிக்கு கைகொடுக்குமா?
“நண்பர்கள் கவனத்திற்கு” படத்தின் ஆடியோ ரிலீஸில் - 'இளைய கவிப்பேரரசு' சினேகனின் அலறல் !
சரத்குமாரின் குழந்தையாக‌ நடித்த மனீஷாஜித் ஹீரோயினாகும் படம் -'நண்பர்கள் கவனத்திற்கு'!
விஜய்,விஜயகாந் ரசிகர்கள் மோதல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions