நண்பேண்டா கதை இதுதான்

Bookmark and Share

நண்பேண்டா கதை இதுதான்

கதிர்வேலனின் காதல் சறுக்கிய பிறகு நண்பேண்டாக்களின் துணையுடன் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள போராடிக் கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். நயன்தாரா, சந்தானம், ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம், இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் என அவரது ஆஸ்தான நிலைய வித்தவான்கள் இதிலும் உண்டு.

இயக்குனர் மட்டும்தான் ராஜேஷ். எம்முக்கு பதில் அவரது சீடர் ஜெகதீஷ். ஏப்ரல் 2ந் தேதி படம் வெளிவருகிறது. நண்பேண்டாவின் கதை இதுதான். உதயநிதி, சந்தானம், கருணாகரன் முன்று பேரும் தஞ்சையை சேர்ந்தவர்கள், பக்கத்து பக்கத்து தெருக்காரர்கள். மூன்று பேரும் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படிக்கிறார்கள்.

உதயநிதிக்கும், சந்தானத்துக்கும் கருணாகரனை கேலியும், கிண்டலும் செய்வதுதான் வேலை. ஒரு நாள் வந்த சண்டையில் கருணாகரன் விலகி பள்ளியை விட்டே போய்விடுகிறார்.

உதயநிதியையும், சந்தானத்தையும் பழிவாங்க நேரம் பார்த்துக் கொண்டிருப்பார். இது பிளாஷ் பேக் கதை. நிகழ்காலத்தில் உதயநிதி வேலை வெட்டி இல்லாமல் இருப்பார்.

சந்தானம் திருச்சியில் வேலை பார்த்துக் கொண்டிருப்பார். வேலை இல்லாத உதயநிதி தினமும் தஞ்சாவூரிலிருந்து திருச்சிக்கு சென்று சந்தானம் செலவில் ஜாலியாக இருந்து விட்டு வருவார்.

இந்த சூழ்நிலையில் அவர்கள் பகுதிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக வருகிறார் கருணாகரன். அதிகார பலத்துடன் இருக்கும் கருணாகரன், அப்பாவிகளாக இருக்கும் உதயநிதியையும், சந்தானத்தையும் எப்படி பழிவாங்குகிறார். அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை.

இதில் உதயநிதியின் பெயர் சத்யா, சந்தானத்தின் பெயர் சிவக்கொழுந்து, கருணாகரனின் பெயர் இன்ஸ்பெக்டர் தங்கதுரை. நயன்தாரா வேலைவெட்டி இல்லாத உதயநிதியின் காதலை ஏற்றுக் கொள்ளாமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டு திரியுறவர்.

"சீக்கிரம் லவ்வை சொல்லுங்க மண்டபத்துக்கு அட்வான்ஸ் கொடுக்கணும்" என்று உதயநிதி பின்னாலே சுற்றுவார். நயன்தரா உதயநிதியின் காதலை ஏற்பது எப்படி என்பது ரொமான்டிக் பகுதி கதை. முதன் முறையாக உதயநிதி சண்டையெல்லாம் போட்டிருக்கிறார். 


Post your comment





Related News
நண்பேன்டா படத்திற்கு வரி விலக்கு கேட்டு உதயநிதி வழக்கு
நண்பேன்டா படத்தில் உதயநிதிக்கும் நயன்தாராவுக்கும் மோதல்
நண்பேன்டா படத்தினால் கொம்பன் தள்ளிப்போகிறதா?
கோடையில் குவியும் படங்கள்...
மதுக்கடையில் நயன்தாரா பீர் வாங்கினாரா?: இன்டர்நெட்டில் பரவும் படங்கள்
முட்டாள்கள் தினத்துக்கு அடுத்த நாள் ரிலீசாகிறது... \"நண்பேன்டா\" !
நட்புக்கு மரியாதை தரும் நண்பேன்டா
அவசரகதியில் நடந்து முடிந்த நண்பேன்டா ஆடியோ விழா!
நண்பர்களுடன் நண்பேன்டா ஆடியோவை வெளியிடும் உதயநிதி
நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார்: சொல்லுவது உதயநிதி ஸ்டாலின்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions