நண்பேன்டா படத்தினால் கொம்பன் தள்ளிப்போகிறதா?

Bookmark and Share

நண்பேன்டா படத்தினால் கொம்பன் தள்ளிப்போகிறதா?

அமீர் இயக்கிய பருத்தி வீரன் படத்தில் நடிகராக அறிமுகமான கார்த்தி அதன் பிறகு பல படங்களில் நடித்துவிட்டார். ஆனால் பருத்திவீரன் படத்தைப் போல் அவரது மற்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர்ஹிட்டாகவில்லை.

அதுமட்டுமல்ல, கார்த்தியின் நடிப்பும் பருத்தி வீரன் அளவுக்கு இல்லை என்றும் சொல்லப்பட்டு வந்தது. இந்த இரண்டு விஷயங்களையும் கருத்தில் கொண்டே பருத்தி வீரன் சாயலில் உள்ள கொம்பன் கதையை தேர்வு செய்தார் கார்த்தி.

'பருத்தி வீரன்' படத்திற்கு பிறகு கார்த்தி முழுக்க முழுக்க கிராமத்து கதையில் நடித்துள்ள படம் என்றால் அது 'கொம்பன்' தான்.  சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்களும் டிரைலரும் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது மட்டுமல்ல, பருத்திவீரன் படத்தைப்போல் உள்ளதாகவும் பாராட்டப்பட்டு வருகிறது.

'குட்டிப்புலி' படப்புகழ் முத்தையா இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருக்கிறார். ராஜ்கிரண், கோவை சரளா முதலானோரும் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.  

கொம்பன் படத்தை பெரிய அளவில் ரிலீஸ் செய்ய, திட்டமிட்டுள்ள 'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் தமிழகத்தில் மட்டும் 'கொம்பன்' 360-க்கும் அதிகமான தியேட்டர்களை புக் பண்ணி வைத்திருந்தது.

அதே தேதியில் நண்பேன்டா படமும் வெளியாவதால் கொம்பன் படத்தின் தியேட்டர் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. இந்தப் பிரச்சனை காரணமாக கொம்பன் படத்தை மீண்டும் தள்ளி வைத்து ஏப்ரல் 10 அல்லது 17 அன்று வெளியிடலாமா என்ற ஆலோசனை நடக்கிறதாம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions