நண்பேன்டா படத்துக்கு வரிவிலக்கு இல்லை: வழக்கு தொடரப்போவதாக உதயநிதி அறிவிப்பு

Bookmark and Share

நண்பேன்டா படத்துக்கு வரிவிலக்கு இல்லை: வழக்கு தொடரப்போவதாக உதயநிதி அறிவிப்பு

உதயநிதி ஸ்டாலின் – நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள படம் ‘நண்பேன்டா’. இதில் சந்தானம் காமெடி வேடத்தில் வருகிறார். ஏ.ஜெகதீஷ் இயக்கியுள்ளார். இந்தப் படம் வருகிற ஏப்ரல் மாதம் 2–ந்தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

‘நண்பேன்டா’ படம் காமெடி படமாக தயாராகி உள்ளது. நயன்தாரா மீண்டும் எனக்கு ஜோடியாக நடித்துள்ளார். சந்தானம் ஜோடியாக ஷெரின் வருகிறார். நான் கடவுள் ராஜேந்திரன், தமன்னா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தை தமிழக அரசின் வரி விலக்கு குழுவினருக்கு காட்டினோம். படத்தை பார்த்து விட்டு வரிவிலக்கு அளிக்க முடியாது என்று மறுத்து விட்டதாக எனக்கு தகவல் வந்துள்ளது.

ஏற்கனவே என் படத்துக்கு வரி விலக்கு அளிக்க மறுத்த குழுவினரே இந்தப் படத்தையும் பார்த்துள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறேன். தற்போது ‘நண்பேன்டா’ படத்துக்கும் வரி விலக்கு அளிக்காததை எதிர்த்து 6 பேர் மீதும் வருகிற 30–ந்தேதி கோர்ட்டில் வழக்கு தொடருவேன்.

இவ்வாறு அவர் கூறினார். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions