நந்தா நடிக்கும் 2 ஆயிரம் சதுர அடியில் சொர்க்கம்!

Bookmark and Share

நந்தா நடிக்கும் 2 ஆயிரம் சதுர அடியில் சொர்க்கம்!

கோடம்பாக்கம், ஈரம், வந்தான் வென்றான், வேலூர் மாவட்டம் உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் நந்தா. இவர் வேலூர் மாவட்டம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தபோது, கமலுக்கு காக்கி சட்டை, ரஜினிக்கு மூன்று முகம், விக்ரமுக்கு சாமி, சூர்யாவுக்கு காக்க காக்க போன்ற போலீஸ் கதைகள் திருப்புமுனையாக அமைந்தது போன்று இந்த படம் எனக்கும் திருப்புமுனையாக அமையும் என்று சொன்னார்.

ஆனால், அந்த படம் தோல்வியடைந்து நந்தாவின் நம்பிக்கையை தகர்த்து விட்டது. இருப்பினும், தற்போது வில்லங்கம், கதம் கதம் உள்பட சில படங்களில் நடித்திருக்கும் நந்தா, அடுத்தபடியாக 2 ஆயிரம் சதுர அடியில் சொர்க்கம் என்றொரு படத்தில் வித்தியாசமான கதையில் நடிக்கிறார்.

இந்த படத்திற்கான கதை விவாதம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு சமீபத்தில் வெளியான சரத்குமாரின் சண்டமாருதம் படத்துக்கு திரைக்கதை எழுதிய எழுத்தாளர் ராஜேஷ்குமார், கதை வசனம் எழுதுகிறார்.

அதனால் இந்த படத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ள நந்தா, முதன்முறையாக அதிகப்படியான காமெடி காட்சிகளிலும் நடிக்கிறாராம். அதனால் சில லேட்டஸ்ட் காமெடியன்களை இந்த படத்தில் நடிக்க வைக்கும் முயற்சியும் நடக்கிறது.


Post your comment





Related News
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனராகும் தனுஷ் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
சீனியர் நடிகர்களை மதிக்கும் வேண்டும் - இளம் நடிகர்களுக்கு நடிகர் ஆனந்த்ராஜ் வேண்டுகோள்!
காமெடி நடிகரின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? சொத்துக்கள் இங்கே
ஆலுமா டோலுமா பாடலை கேட்டு தாய் வயிற்றிலேயே நடனம் ஆடிய பிரபல நடிகரின் குழந்தைகள்
முன்னணி நடிகரை இயக்குகின்றார் கே.எஸ்.ரவிக்குமார்- அடுத்தப்பட அப்டேட்
விஜய் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்ட புதிய தகவல்
ரஜினிகாந்தை அடித்த தருணம்- மனம் திறக்கின்றார் ஆனந்த்ராஜ்
கன்னிகளுடன் புத்தாண்டு கொண்டாடிய நித்யானந்தா! லீலையை மீண்டும் துவக்கினார்!
அதிமுகவில் இருந்து விலகிய நடிகர் ஆனந்தராஜூக்கு கொலை மிரட்டல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions