நலிவடைந்த நாடக நடிகர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்: நந்தா பேட்டி

Bookmark and Share

நலிவடைந்த நாடக நடிகர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்: நந்தா பேட்டி

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடக நடிகர்களை கணக்கெடுத்து அவர்களின் பொருளாதார நிலையை கண்டுபிடித்து அவர்களுக்கு உதவ ‘குருதட்சணை’ என்ற திட்டத்தை தென்னிந்திய நடிகர் சங்கம் அறிமுகப்படுத்தி உள்ளது. 

இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் நாடக நடிகர்கள் பற்றிய விவரங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாடக, நடிகர்களை கண்டறிந்து, அவர்களது விவரங்களை சேகரிக்க தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் நடிகர் நந்தா நியமிக்கப்பட்டு உள்ளார். 

இவர் நாமக்கல்லில் முகாமிட்டு நாடக, நடிகர்களை சந்தித்து அவர்களின் விவரங்களை சேகரித்து வருகிறார். நாடக, நடிகர்கள் தங்களின் குடும்ப விவரம், கல்வி அறிவு, நடிப்பு,

பொருளாதார நிலை பற்றிய விவரம் ஆகியவற்றை பூர்த்தி செய்து, விண்ணப்பமாக கொடுத்து வருகின்றனர். இது குறித்து நடிகர் நந்தா நிருபர்களிடம் கூறியதாவது:- 

நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 120 நாடக, நடிகர்கள் உள்ளனர். அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இங்கு சேகரிக்கப்படும் விவரங்களின் அடிப்படையில்நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கப்படும். இந்த விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் ஏற்றப்படும்.

அத்துடன் ஒவ்வொரு நாடக, நடிகர்களின் புகைப்படம் மற்றும் நடிப்பும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, இணையதளத்தில் ஏற்றப்பட உள்ளது. இந்த பட்டியல் சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் வசம் ஒப்படைக்கப்படும். 

அவர்கள் தங்களுக்கு தேவையான நாடக, நடிகர்களை தேர்வு செய்து கொள்ளுவார்கள். இதன் மூலம் நாடக, நடிகர்களுக்கு சினிமா வாய்ப்பு பெற்றுத் தரப்படும். இதுதவிர நாடக கலைஞர்களின் குடும்பத்திற்கு கல்வி உதவித்தொகை வழங்கவும், காப்பீடு செய்து கொடுக்கவும் இந்த பட்டியல் பயன்படுத்தப்பட உள்ளது. 

இவ்வாறு நடிகர் நந்தா கூறினார்.


Post your comment





Related News
படிப்படியாக முன்னேறவே ஆசை: நடிகர் அருள்
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
நடிகைகள் விலகியதால் சர்ச்சை! - பிரச்னையை தீர்க்க திலீப் எடுத்த அதிர்ச்சி முடிவு
நடிகர் பாண்டியராஜனுக்கு டாக்டர் பட்டம்
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்
என் வாழ்க்கையில் இதுதான் மிகப்பெரிய இழப்பு - மைம் கோபி
போலிசிடம் வசமாக மாட்டிய பிரபல நடிகர் கைது!
மயக்க மருந்து கொடுத்து காதலியை கற்பழித்த இளம் நடிகர் - அதிர்ச்சி தகவல்
சினிமா நடிகருக்கு பெண் ரூபத்தில் வந்த எமன்! கோர சம்பவம் - போட்டோ உள்ளே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions