நடிகை வேடத்தில் நடிக்கும் அட்டகத்தி நந்திதா!

Bookmark and Share

நடிகை வேடத்தில் நடிக்கும் அட்டகத்தி நந்திதா!

மொழி, அபியும் நானும், கெளரவம் உள்பட சில படங்களை இயக்கிய ராதாமோகன் தற்போது இயக்கி வரும் படம் உப்புக்கருவாடு. கடற்கரை பிரதேசத்து மக்களின் வாழ்வியலை சொல்லும் வகையில் இந்த படம் உருவாகியிருக்கிறது. நந்திதா லீடு ரோலில் நடித்திருக்கிறார்.

மேலும், சினிமாவுக்குள் ஒரு சினிமா எடுக்கும் வகையில் இப்படத்தின் கதை உருவாகியிருக்கிறது. அதாவது கடலை நம்பி கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் படகு, மீன் வலை போன்ற பொருட்களை வாடகைக்கு கொடுத்து தொழில் செய்து வரும் ஒருநபர், மீனவ மக்களின் வாழ்க்கையைப்பற்றி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று உப்புக்கருவாடு என்ற படத்தை தயாரிப்பாராம்.

அப்படி மீனவ மக்களின் வாழ்க்கையை சொல்லும் இந்த படத்தில் நந்திதா நடிகை நந்திதாவாகவே நடித்துள்ளார். அவருடன் கருணாகரனும் ஒரு முக்கிய ரோலில் நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, டாடி எனக்கு ஒரு டவுட்டு சரவணன் ஆகியோர் காமெடி வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

அதனால் உப்புக்கருவாரு படம் கடலோர மக்களின் கஷ்ட நஷ்டங்களை மட்டுமே சொல்லாமல், அவர்களின் சந்தோசங்களையும் கலந்து காமெடியாக சொல்ல வருகிறதாம் 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions