நடிகர்,நடிகையுடன் கடலை போடும் நந்திதா!

Bookmark and Share

நடிகர்,நடிகையுடன் கடலை போடும் நந்திதா!

அட்டகத்தி படத்தில் தமிழுக்கு வந்த பெங்களூர் நடிகையான நந்திதாவுக்கு தமிழ்ப்படங்களில் நடிக்க வரும் போதே ஓரளவு தமிழ் தெரியும். அதோடு, இயல்பாக நடித்து கதாபாத்திரங்களில் எளிதாக ஒட்டிக்கொண்ட நந்திதா, இப்போது புலி படத்தில் விஜய்யுடன் நடிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்.

மேலும் ராதா மோகன் இயக்கி வரும் உப்புக்கருவாடு படத்தில் லீடு ரோலில் நடிக்கும் நந்திதா, இடம்பொருள் ஏவல் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மேலும், குறுகிய காலத்தில் தமிழில் பத்து படங்களுக்கு மேல் நடித்து விட்டதால் இப்போது சரளமாக தமிழ் பேசுகிறார் நந்திதா.

குறிப்பாக, படப்பிடிப்பு தளங்களில் நடிகரோ, நடிகையோ யாராவது அவர் பக்கத்தில் அமர்ந்து விட்டால், படபட வென்று பொறிந்து தள்ளுகிறாராம் நந்திதா. ஏதாவது ஒரு டாப்பிக்கை எடுத்து அவர் பேச ஆரம்பித்தால் விடவே மறுக்கிறாராம்.

அதனால் இதுவரை நந்திதாவுக்கு சரியாக தமிழ் தெரியாது என அவர் அருகில் தைரியமாக அமர்ந்து ஓய்வெடுத்த நடிகர்கள் இப்போது அவரைக்கண்டாலே தெறித்து ஓடுகிறார்கள்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions